25.7 C
Jaffna
March 2, 2025
Pagetamil
ஆன்மிகம்

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

நவகிரகங்களில் சந்திர பகவானின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமாக ரோகினி நட்சத்திரம் இருக்கிறது. ரோகினி நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் சிறந்த நிலையை அடைவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது சிறப்பானதாகும்.

வருடத்திற்கு ஒருமுறை நவகிரகங்களில் சந்திர பகவானுக்குரிய திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட வேண்டும். எந்த ஒரு புதிய காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் பெற்ற தாயாரையும், தாய் வழி முன்னோர்களையும் வழிபட்டு தொடங்குவது சிறந்த வெற்றிகளைத் தரும். கோடைக்காலங்களில் மற்றும் கோவில் விழாக்களில் மக்களின் தாகத்தைத் தணிக்க மோர் பந்தல் அமைத்து, மோர் தானம் வழங்குவது நல்லது. மேலும் வீட்டிற்கு வெளியே பசுக்கள், நாய்கள் போன்றவை தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நீர் தொட்டி அமைத்து, அதில் எப்போதும் நீர் ஊற்றி வைத்தது சிறப்பான பலன்களைத் தரும்.

ரோகினி நட்சத்திரத்திற்குரிய தலவிருட்சமாக நாவல் பழ மரம் இருக்கிறது. நாவல் மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று நாவல் பழமரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது ரோகிணி நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை நீக்கும். மன நோயாளிகளுக்கு உணவு, ஆடை தானங்கள் போன்றவற்றை செய்வது சந்திர பகவானின் அருளாசிகளைத் தரும் பரிகாரமாக இருக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய ராசி பலன்கள் – 28.02.2025 – வெள்ளிக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2025 – வியாழக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 26.02.2025 – புதன்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 25.02.2025 – செவ்வாய்க்கிழமை

Pagetamil

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் – 24.02.2025

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!