ஏகாதசி விரதத்தின் பலன்கள்

Date:

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11ம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப்படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும்.

ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி “முக்கோடி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது.

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி “பாபமோஹினி’ என்றும்; தேய்பிறை ஏகாதசி “காமதா’ என்றும் அழைக்கப்படுகிறது. வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி “வருதினி’ என்றும்; தேய்பிறை ஏகாதசி “மோகினி’ என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனி மாதத்தில் வரும் “அபரா’, “நிர்ஜலா’ ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபடுவோர் சொர்க்கம் செல்வர். ஆடி மாதத்து “யோகினி’, “சயன’ ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்கள், பலருக்கு அன்னதானம் செய்த பலனைப் பெறுவர்.

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியான “காமிகை’யிலும் தேய்பிறை ஏகாதசியான “புத்திரதா’விலும் விரதமிருப்போருக்கு நன்மக்கட்பேறு கிட்டும். புரட்டாசி மாத ஏகாதசிகள் “அஜா’, “பரிவர்த்தினி’ எனப்படுகின்றன. ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி “இந்திரா’, தேய்பிறை ஏகாதசி “பராங்குசா’ என அழைக்கப்படுகின்றன. கார்த்திகை மாத ஏகாதசிகள் “ரமா’, “பிரமோதினி’. மார்கழி மாத ஏகாதசி “வைகுண்ட ஏகாதசி’ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை மாத ஏகாதசிகள் “சுபலா’, “புத்ரதா’ எனப்படுகின்றன. மாசி மாத வளர்பிறை ஏகாதசியான “ஜெயா’வில் விரதமிருப்போர் தங்கள் பாவம் நீங்கி நன்மை அடைவர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்