மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம்.
தமிழில், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடும் இவர், சமீபத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து, சினிமாவில் பணியாற்றும் தழையப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றிய இழிவான கருத்துக்களை யூடியூபில் வீடியோ பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மீரா மிதுனை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, நடிகை மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க கோரி யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதி உள்ளார். நடிகை மீரா மிதுன், வன்முறையை தூண்டும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை நடவடிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.