Pagetamil
இந்தியா

12-18 வயதுப் பிரிவினருக்கு வர இருக்கும் ஜைகோவ்-டி தடுப்பூசி

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசி: ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல்

 நமது நாட்டிற்கு எதிராக உள்நாட்டு தயாரிப்புகளான கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் என 5 தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் 6-வது தடுப்பூசியாக ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி வருகிறது. இந்த தடுப்பூசிக்கு இம்மாத இறுதியில் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்து விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

 இந்த தடுப்பூசிதான் இந்தியாவில் 12-18 வயது குழந்தைகளுக்காக வரவுள்ள முதலாவது  தடுப்பூசி ஆகும்.

 இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு ஒப்புதலுக்காக கடந்த மாதம் 1-ந்தேதி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதற்காக கூடுதல் தரவுகள்கேட்கப்பட்டு அவையும் சமர்க்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

 இந்த தடுப்பூசி ஊசி இல்லாத இன்ஜெக்டரைப் பயன்படுத்தி போடப்படும். இதனால் பக்க விளைவுகளும் குறைவு ஆகும். 50 இடங்களில் இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசளிக்கப்பட்டுள்ளது. 12-18 வயது பிரிவில் பரிசோதிக்கப்பட்ட முதல் தடுப்பூசியும் இது ஒன்றுதான்.

 1000 குழந்தைகள் உள்பட 28 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி போட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தங்கம் கடத்திய நடிகை கைது!

Pagetamil

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

Leave a Comment