29.1 C
Jaffna
April 10, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய வாழ்க்கைப் பாடம்

பெண் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியவ.

ஒரு பெண் இன்றைக்கு சாலையில் தைரியமாக நடந்து செல்கிறாரோ? அன்றுதான் உண்மையான சுதந்திரம் நாட்டுக்கு வந்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி.

இன்றைய சூழலில் நடுத்தர வயது பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்றால், பால் முகம் மாறாத சிறுமிகளும் இந்த வஞ்சக பூமியில் நிம்மதியாக கால் பதிக்க முடியாத நிலையே உள்ளது.

கயவர்களின் பிடியில் இருந்து சிறுமிகளை, குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் துணிச்சலை சிறுமிகளிடையே ஏற்படுத்த வேண்டும். சிறுமிகள் தனியே பயணிக்க நேர்ந்தால், ஆட்டோ, கார் என எந்த வாகனத்திலும் ஏறும் முன்பு வாகனத்தின் எண், ஓட்டுனரின் கைபேசி எண் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள பெற்றோருக்கு குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் ஓரளவு தவறுகள் நிகழாமல் தடுக்க முடியும்.

பொது இடங்களில் அறிமுகம் இல்லாத ஆண்களோ, பெண்களோ யார் வழிய வந்து பேசினாலும், முகவரி கூற அழைத்தாலும் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என குழந்தைகளிடம் எடுத்துரைக்க வேண்டும்.

யாரையும் சுலபமாக நம்பி விடக்கூடாது என போதிக்க வேண்டும். பூ வாக இருக்க வேண்டிய இடத்தில் பூவாகவும், புயலாக மாறவேண்டிய சந்தர்ப்பத்தில் புயலாகவும் மாற வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் நங்கூரமாக நிலை நிறுத்த வேண்டும்.

கயவர்களின் கழுகுப்பார்வையை மாற்றிட முடியாது. ஆனால் கழுகுகளின் பிடியில் இருந்து குஞ்சுகளை காக்கும் கோழிகளைப்போல் நாம்தான் நமது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்

சமையல் குறிப்புக்கள் – கோவா வடை

Pagetamil

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

Pagetamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!