மாசாக ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு

Date:

நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேலு, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் மறுத்தனர். இதனால் பல வருடங்களாக நடிக்காமல் உள்ளது. ஆனாலும் அவரது மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன.

சில தினங்களுக்கு முன்பு டிடெக்டிவ் நேசமணி என்ற துப்பறியும் கதையில் வடிவேல் நடிக்கிறார் என்று போஸ்டருடன் தகவல் வந்தது. பின்னர் அது வதந்தி என்று தெளிவுபடுத்தினர். ஓடிடி தளத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அழைத்து வருவதாகவும் பேசப்பட்டது. அதுவும் உறுதியாகவில்லை.

தற்போது, ​​ஓடிடி தளத்துக்காக தயாராகும் புதிய படங்களிலும், சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்திலும் வடிவேலு நடிக்க உள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது. 10 இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி வருகிறார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கம் தடுத்தால் வடிவேலு நடிக்கும் படங்களை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்