வல்வெட்டித்துறையில் இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை!

Date:

இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (16) வல்வெட்டித்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வல்வெட்டிப் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கிருஷாந்தன் (31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் சகோதரியின் கணவரால் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்தை நடத்திய 23 வயதான மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலீஸார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...

சவுதி மீது கடல்வழி முற்றுகையை அறிவித்த ஹூதிகள்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்!

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து,...

ஹூதிகளின் கடல்வழி முற்றுகையை கடுமையாக சாடிய சவுதி!

ஈரான் ஆதரவு ஹூதி போராளிக் குழு, சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடற்படை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்