தகுதியான வேலையில் இருக்கிறீர்களா: இதோ அறிந்து கொள்ளுங்கள்!

Date:

அனைவருமே ஏதோ ஒரு வேலையில் உங்களை நிலைநிறுத்தி, பொருளாதார ரீதியில் நிலையாக தங்களை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதேசமயம் நாம் செய்யும் வேலை நமக்கு ஒரு திருப்தியைத் தர வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

நீங்கள் சரியான வேலையில் தான் உங்களை இணைக்கிறீர்கள்? இந்த மூன்று கேள்விகள் உங்களுக்கு விளக்கும்.

* நீங்கள் சவாலுக்கு தயாரா?

உங்களுக்குத் தரப்பட்ட வேலையில் 60-75 சதவிகிதம் முழுமையான ஈடுபாடு உள்ளது என்று வைத்துக் கொண்டால், உங்கள் வேலையில் இன்னும் சவாலை அதிகரிக்க நீங்கள் தயாரா என்பது தான் முதல் கேள்வி. அதுமட்டுமின்றி இந்தச் சவாலில் உங்களை சிரமப்படுத்தி கொள்ளாமல் எப்படி எதிர் கொண்டு இலக்கை அதிகரிக்கிறது என்பது மிகப்பெரிய சவால். உங்களால் இதைச் செய்ய முடியும் என்றால் சரி, இல்லை என்றால் வேறு வேலை உங்களைத் தேடுகிறது என்று அர்த்தம்.

* நீங்கள் முழுமையாக உணர்கிறீர்களா?

உங்கள் வேலை உங்களை உற்சாகப்படுத்துகிறதா? நீங்களாகவே உங்கள் வேலையால் புத்துணர்ச்சியடைகிறீர்களா? இதற்கெல்லாம் ‘இல்லை’ என்ற பதில் இருந்தால், ‘ஆம்’ என்ற பதில் தரும் வேலையைத் தேடலாம். ‘ஆம்’ என்றால் உங்களை வெற்றி மட்டுமே நெருங்கும் என்ற கூடுதல் மகிழ்ச்சியுடன் வேலையைத் தொடருங்கள்.

* உங்கள் சூழல் எப்படி இருக்கிறது?

நீங்கள் செய்யும் வேலைக்கு உங்கள் சூழல் சரியான ஒத்துழைப்பை தருகிறதா? நீங்கள் செய்யும் வேலைகள் அங்கீகரிக்கப்பட்டு, நீங்கள் பட்டியலிடுகிறீர்களா? நீங்கள் செய்யும் வேலைகளால் உங்கள் பணி பாதுகாப்பு உறுதியாக உள்ளது என்று நம்பினால் நீங்கள் தகுதியாக இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.

இந்த மூன்று கேள்விகளின் பதிலுக்கும் உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் உங்கள் வேலையில் நீங்கள் பொருந்தி இருக்கிறீர்கள், பொருத்தமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லை என்றால் உங்கள் வேலை இதுவல்ல, உங்களை ‘ஆம்’ என்று கூற வைக்கும் வேலை உங்களுக்காக எங்கேயோ காத்துக்கொண்டிருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்