Pagetamil
சினிமா

சிம்புவுக்கு ரெட் கார்டா: சிம்புவின் தாயார் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்

சிம்புவின் தாயார் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்!

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட விவகாரம் தொடர்பாக அண்மையில் வீடியோ ஒன்றில் பேசிய சிம்புவின் தாயார் உஷா டி.ராஜேந்தர், அதில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் சிலம்பரசன். அவருக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை, பட வெளியீட்டுக்கு முன்பு கொடுக்கிறேன் என்று சொன்ன மைக்கேல் ராயப்பன் கொடுக்கவில்லை. எனது மீதி சம்பளத்தைக் கொடுத்துவிட்டு படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார் சிலம்பரசன். பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிலம்பரசனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை விட்டுக் கொடுத்தால் மட்டுமே, படம் நாளை வெளியாகும் என்றார் மைக்கேல் ராயப்பன்.

சிலம்பரசனும் பணமே வரவிட்டாலும் பரவாயில்லை என்றாலும், படத்தைத் தேர்ந்தெடுத்து தயாரிப்பாளர் வெளியிடட்டும் என்று சொல்லிவிட்டார் என அறிவித்தார். தொடர்ந்து
உஷா ராஜேந்தர் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மைக்கேல் ராயப்பன், ‘AAA’ படம் தவிர சிம்பு இன்னொரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் போடக் கேட்டேன். அதற்காகத்தான் 75 லட்சம் தருவதாகக் கூறினேன். அவருக்கு தந்ததில் ஒரு செக் பவுன்ஸானது.

அந்தத் தொகையை மறுநாளே டிடி எடுத்து தந்துவிட்டேன். ஆனால், சிம்பு இன்னும் அந்த செக்கை திருப்பித் தராமல் வைத்துள்ளார் என்று புதிதாக ஒரு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். அவரின் இந்த புதிய குற்றச்சாட்டுக்கு சிம்பு தரப்பில் இருந்து என்ன மாதிரியான பதில் வர போகிறது என்று அறியப்பட்ட கோலிவுட் சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது.

சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வரும் இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்து நடிக்கிறார் சிம்பு. இந்த படத்தில் அவரின் அம்மாவாக ராதிகா சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி நடந்து வருவது.

இதையும் படியுங்கள்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!