ஆப்கானிஸ்தானின் அதிகாரம் தலிபான்களிடம் ஒப்படைக்கப்படுகிறது: புதிய இடைக்கால அரசு நியமனமாகும்!

Date:

ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை அமைதியான முறையில் தலிபான்களிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுக்கள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஜனாதிபதி மாளிகையின் அதிகாரம் தலிபான்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகுமென்றும் தெரிகிறது.

தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா இந்த செயல்முறைக்கு மத்தியஸ்தம் செய்வதாக கூறப்படுகிறது.

புதிய இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக அலி அஹமத் ஜலாலி நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஆப்கானின் பதில் உள்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் வெளியிட்ட இரண்டு தனித்தனி வீடியோ செய்திகளில்,  சர்வதேச கூட்டாளிகளுடன் சேர்ந்து நகரத்தைப் பாதுகாப்பதால் காபூல் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக, தலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில்,  ஆப்கானிஸ்தான் தலைநகருக்குள் இராணுவரீதியாக நுழைய விரும்பவில்லை, காபூலை நோக்கி அமைதியாக நுழைவோம், யாரையும், பழிவாங்க மாட்டோம், அரச அதிகாரிகளிற்கும் பொதுமன்னிப்பளிக்கப்படும் என்பதால் காபூலில் வசிப்பவர்கள்பயப்பட வேண்டாம் என்று உறுதியளித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

துப்பாக்கிச்சூட்டு முயற்சி தோல்வி

மவுண்ட் லவினியா காவல் பிரிவின் டெம்பிள் ரோட் பகுதியில் உள்ள ஒரு...

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும்...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94வது இடத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்