லெபனானின் வடக்கு பிராந்தியமான அக்காரில் ராணுவம் பறிமுதல் செய்து வைத்திருந்த பெட்ரோல் டேங்கர் திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 80 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராணுவம் பறிமுதல் செய்த டேங்கர் வெடித்ததாக அதிகாரப்பூர்வ தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரவில் பெட்ரோல் நிரப்புவதற்காக டேங்கரைச் சுற்றி திரண்டிருந்த பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இந்த மோதலுக்கு முன்பாக ராணுவம் அந்த பகுதியை விட்டு வெளியேறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி, கடுமையான எரிபொருள் பற்றாக்குறை, நீணடநேர மின்வெட்டு போன்றவற்றால் நாடு தத்தளித்து வரும் நிலையில், இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1