வவுனியாவில் 50 பேருக்கு தொற்று!

Date:

வவுனியாவில் 50 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.

அதில், சூடுவெந்தபுலவு பகுதியில் இருவருக்கும், உளுக்குளம் பகுதியில் இருவருக்கும், சமயபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் மூன்று பேருக்கும், தேக்கவத்தை பகுதியில் நான்கு பேருக்கும், புளியங்குளம் பகுதியில் இருவருக்கும், நொச்சிமோட்டைப் பகுதியில் ஒருவருக்கும், ஒமந்தை பகுதியில் மூன்று பேருக்கும், டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் இருவருக்கும், கற்குழி பகுதியில் ஒருவருக்கும், வைரவபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், ஆனைவிழுந்தான் பகுதியில் மூன்று பேருக்கும், சிப்பிக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், குடாகச்சகொடி பகுதியில் ஒருவருக்கும், ஒலுமடு பகுதியில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் இருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியில் ஒருவருக்கும், ஒமந்தை இராணுவ முகாமில் ஒருவருக்கும், போகஸ்வேவ பகுதியில் ஒருவருக்கும், மதவாச்சி பகுதியில் ஒருவருக்கும், பூம்புகார் பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் இரண்டு பேருக்கும், செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒருவருக்கும், வேலன்குளம் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளம் பகுதியில் ஒருவருக்கும், ஹொரவப்பொத்தானை பகுதியில் ஒருவருக்கும், செக்கட்டிப்புலவு பகுதியில் இருவருக்கும் என 50 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்