ரிசாட் பதியுத்தீன் என்பவர் வன்னி மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடித்த கொள்ளையன் என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாதம் பாரிய ஒரு அநீதி ஏற்பட்டது. அதுதான் முன்னாள் அமைச்சரும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுத்தீனின் வீட்டில் இடம்பெற்ற இசாலினியின் மரணம் தற்கொலையா, கொலையா என்ற தருணத்திலே இன்று அதற்கு நீதிமன்ற விசாரணை நேர்மையான முறையிலே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பில் எமது கட்சியே முதல் முதலாக எவ்வித அரசியல் எதிர்பார்ப்புமின்றி அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடார்த்தியிருந்தோம். அதன் பின்னர் இன்று நாடு முழுவதும் குறித்த பிரச்சினை தொடர்பில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
ரிசாட் பதியுத்தீனை ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதி இன்று விசாரணை செய்துகொண்டிருக்கின்றார்கள். விசாரணையின் முடிவில் அவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் அவருக்கு சரியான தண்டனையை வழங்கும்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலே பல நீதிமன்றங்களை அவதூறாக பேசி நதீமன்றங்களின் பிரச்சினைகளை அவர்களே கையில் எடுத்துக்கொண்டு பலபேர் நீதிபதிகள் போல் செயற்பட்டார்கள். அதனை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
ரிசாட் பதியுத்தீன் என்பவர் வன்னி மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடித்த கொள்ளையன். அதேபோன் அவரது சகோதரன் ரிவ்கானும் தமிழ் மக்களை அடக்கு ஒடுக்கி வாழ்ந்த வரலாறு இருக்கின்றது. வன்னி மண் எமது மண். இது தமிழ் மக்களிற்கான மண். தமிழ் மண்ணை இனியும் உங்களிற்கு தாரைவார்த்து கொடுக்க முடியாது.
வன்னியில் ரிசாட் பதியுத்தீனால் மக்கள் ஒடுக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கின்றேன். வன்னியில் இருக்கின்ற மக்கள் ரிசாட் பதியுத்தீனால் பாதிக்கப்பட்டிருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் அதற்கான தீர்வினை பெற்றுத்தருவோம்.
சகரானுடன் தொடர்பிருந்தமையால் கைது செய்யப்பட்டுள்ள ரிசாட், இசாலினியி் மரணத்திலும் கைது செய்யப்பட வேண்டும். இசாலினி என்ற சிறுமியை துஸ்பிரயோத்திற்குள்ளாக்கியமை சம்மந்தமாக அவரது குடும்பம் இன்று சிறைகூடத்தில் இருக்கின்றார்கள்.
சரத் வீதசேகர அவர்கள் புர்க்காவை தடை செய்வது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பித்து அதனை தடை செய்ய வேண்டும். இங்கு புர்காவை அணிந்து கொ்ணடு பலபேர் பாரிய துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த மலையக பெண்ணுக்கு குரல் கொடுக்காது ரிசாட் பதியுத்தீனுக்கு வால் பிடிக்கும் வகையில் சிறிதரன் செயற்படுகின்றார். இதற்கு முன்னரும் அவதறாக பேசியிருந்தீர்கள். நீங்கள் இங்குள்ள மலையக மக்களின் வாக்குகளால்தான் பாராளுமன்றம் செல்கின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
மத்திய அரசின் கீழ் செயற்படமாட்டோம் என கூறி வந்த நீங்கள், கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் மத்திய அரசாங்கத்தின் கீழ் மண்டியிட்டுக்கொண்டிருந்தீர்கள். சிறிதரனும் மண்டியிட்டுக்கொண்டிருந்தார். சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கால்களிலே விழுந்து கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
உரிமை எனசொல்லிக்கொண்டு ரணில் விக்ரமசிங்காவால் கொடுக்கப்பட்டதுதான் கம்பெரலிய. இதுதான் உரிமை. ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து இங்கு பல கல்கள் நாட்டினார்கள். சந்தோசம். அதைதான் நாங்களும் சொல்கின்றோம். எந்த அரசாங்கம் வந்தாலும் உரிமையையும் பேசிக்கொண்டு அபிவிருத்தியையும் மக்களுக்கு பெற்றுக்கொடுங்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.