அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக மனு தாக்கல்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேரா, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 91வது பிரிவின்படி, பொது சேவையில் ஈடுபடும் ஒருவர் பாராளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்கத் தகுதியற்றவர் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி பதவி அரச பதவியாக கருதப்படுவதால், அந்த பதவியை வகிக்கும் அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினராக தொடர தகுதியற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசியலமைப்பின்படி அவர் பாராளுமன்றத்தில் பதவி வகிக்க தகுதியற்றவர் எனத் தீர்மானித்து, அவரது உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் அமரவும், வாக்களிக்கவும் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும், அவர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக செயல்படுவதை தடுக்க இடைக்காலத் தடை வழங்க வேண்டுமெனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்