மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள நோர்வுட் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டிருந்த 48 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 28ஆம் திகதி வரை அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார விதிமுறையை மீறி நிகழ்வு நடைபெறுவதாக மஸ்கெலியா சுகாதார அலுவலர் அலுவலகத்திற்கு பல புகார்கள் வந்ததை அடுத்து, மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சகிதம் சென்று பரிசோதனை நடத்தினார்.
இதில், சுகாதார விதிமுறைகளை மீறி பலர் கலந்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து, நிகழ்வில் கலந்து கொண்டிருந்தது அடையாளம் காணப்பட்ட நிலையில் 48 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு, சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.