தம்பதியர் உறவில் விரிசலா: இனிமே இதை செய்யாதீங்க!

Date:

திருமணம் காதல் திருமணமாக இருந்தாலும் கலப்பு திருமணமாக இருந்தாலும் பெரும்பாலும் விவாகரத்தில் ஏன் முடிகிறது என்பதை அறிவோமா? இன்றைய நிலையில் பெரும்பாலான திருமணங்கள் அன்பற்ற நிலையில், கோபங்கள் மட்டுமே கொண்டு விரக்தியோடு விவாகரத்தில் முடிவடைந்துவிடுகிறது. ஆனால் உண்மையில் விவாகரத்து என்பது முடிவு அல்ல. சில நேரங்களில் அது புரிந்து கொள்ள முடியாத தவறுகளால், பக்குவப்படாத நிலையில் உண்டாகலாம். எங்கு இந்த தவறு நேர்கிறது என்பதை உணரும் தம்பதியர் இதிலிருந்து விடுபட்டால் ஆதர்சன தம்பதியராய் வாழ்வார்கள்.

ஒருவருக்கொருவர் காதலித்து மகிழ்ச்சியோடு மணம் புரிந்தாலும் திருமணத்துக்கு பிறகு அந்த உறவு சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும். கோட்மேன் இன்ஸ்டிட்டியூட் நிறுவனர் மற்றும் நிபுணர் ஜான்கோட்மேன் உறவு சேதமடைந்திருக்கிறதா அல்லது முந்தையதை காட்டிலும் மகிழ்வாக இருக்கிறதா என்பதையும் அவ்வபோது கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். உங்கள் உறவில் சேதமடைந்திருப்பதை நீங்கள் நினைத்தால் நான்கு விஷயங்கள் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மற்ற உறவுகளை விட காதல் மற்றும் பாலியல் உறவுகளில் இந்த சேதம் அதிகமாகவே இருக்கிறது.
உங்கள் உறவை சரி செய்து கொள்ள நீங்கள் விரும்பினால் உங்கள் வாழ்க்கையில் இந்த நான்கு பழக்கங்களை விட்டுவிடுவது உங்கள் உறவு மலர்வதற்கு சிறந்த தொடக்கமாக இவை இருக்கலாம்.

​சந்தேகம் வேண்டாம்

இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட நிலையில் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொள்வது உறவில் முதல் விரிசலை உண்டாக்கலாம். உங்கள் துணை மீது மற்றவர்கள் குறை கூறும் போது அதை அப்படியே ஏற்கும் போது உங்கள் உறவில் முதல் விரிசல் தொடங்குகிறது. உங்கள் துணை மீது அவரது தவறை சுட்டிகாட்டி ஆளுமை செலுத்தும் போது அவரது உணர்வுகளுக்கு நீங்கள் செவி சாய்க்கவில்லை எனில் அப்போது தொடங்குகிறது இந்த விரிசல். மாறாக உங்கள் துணையோடு நீங்கள் பழகி இருக்கிறீர்கள் அவரது குணாதிசயம், பண்புகள், கோபம், உணர்வுகள் எல்லாமே பெருமளவு அறிந்திருப்பீர்கள். அதனால் சந்தேகம் காட்டிலும் தெளிவான உரையாடல் இருவருக்கும் இன்னும் நெருக்கத்தை அதிகரிக்கும்.

​எதிர்தாக்குதல் வேண்டாம்

இருவருமே வார்த்தைகளை உபயோகிக்கும் போது கவனம் தேவை. பெண் அல்லது ஆண் இருவரில் ஒருவர் கோபத்தில் வார்த்தைகளை வெளியிட்டாலும் எதிர்தாக்குதல் தொடமும் போது கோபத்தை உண்டாக்கும் அல்லது உரையாடலை மோசமானதாக ஆக்கும். மாறாக நீங்கள் வாக்குதலை தவிர்த்து எதிர்தாக்குதலை தவிருங்கள். வருத்தமாக இருப்பவர் தான் மிண்டும் வந்து சமாதானம் செய்ய வேண்டும் என்று காத்திராமல் மற்றவர் சமாதானம் செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இத்தருணத்தில் ஒருவரைஒருவர் புரிந்துகொள்ளவில்லை என்னும் குற்றச்சாட்டு தவிர்ப்பதே நல்லது.
அதோடு இந்த பழக்கம் உறவுக்கு ஒரு பாதுகாப்பான வலையை ஏற்படுத்துகிறது. சின்ன சின்ன விஷயங்களில் இதை கவனிக்கும் போது பெரிய விஷயங்களிலும் இவை ஒன்றுமில்லாத உணர்வை இருவருக்குமே சில நிமிடங்களில் உண்டாக்கிவிடும்.

​உறவு குறித்து பேசுங்கள்

85% ஆண்களால் தான் இத்தகைய பிரச்சனைகள் உண்டாகின்றன என்றே சொல்லலாம். ஏனெனில் ஆண்கள் பெண்களிடம் பெரும்பாலான விஷயங்கள் குறித்து பேசுவதற்கே அச்சம் கொள்கிறார்கள். இதனால் பெண்கள் ஆண்கள் தங்கள் பிரச்சனைகளை இவர்கள் பொருட்படுத்துவதில்லை என்னும் எண்ணத்தை உண்டாக்குகிறது.
குறிப்பாக உடலுறவு நேரங்களில் பெண்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஆண்கள் உறவு குறித்து பெண்களின் எதிர்பார்ப்பை அறிந்து பூர்த்தி செய்ய வேண்டும். பெரும்பாலான ஆண்கள் உடலுறவில் தங்களது விருப்பம் மட்டுமே பெண்களுக்கும் விருப்பம் அளிக்கும் என்று விரும்புகிறார்கள். இதனால் தாம்பத்திய வாழ்க்கையில் பெண்கள் வெறுப்பை எதிர்கொள்வார்கள். மாறாக வெளிப்படையான உறவு குறித்த நாட்டம் இருவருக்குள்ளும் வெளிப்படும் போது வெளிப்படையான அன்பு அந்நியோன்யத்தை அதிகரிக்க செய்யும்.

​அவமரியாதையை செய்யாதீர்கள்

உண்மையில் இது இருவருக்குமே உறவில் அதிக சேதத்தை உண்டாக்கிவிடுகிறது. உங்கள் உறவில் மிகப்பெரிய விரிசல் என்பது மோசமாகும் இடம் இங்குதான். ஒருவரையொருவர் சமமாக மதிக்கும் போது தலைதூக்காத பிரச்சனை இந்த இடத்தில் அதிகரிக்க செய்யும். உங்கள் துணையை விட நீங்கள் தான் சிறந்தவர் என்ற எண்ணம் தலைதூக்கும் போது அங்கு எதிர்மறை எண்ணங்களும் அதிகமாகவே தூண்டப்படுகிறது. இது ஒவ்வொருமுறையும் வெளிப்படும் போதெல்லாம் அது துணையை அவமரியாதைப்படுத்தும் செயலாகவே இருக்கும். கேலி, சிடுமூஞ்சித்தனம், அவமதிப்பு போன்றவை நீங்கள் செய்யும் போது நீங்கள் இதை எதிர்கொள்ளும் போது உண்டாகும் உணர்வை அறிய வேண்டும்.

 

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்