இலங்கை தேசிய கபடி அணியின் முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி வீராங்கனைகள் மூவர் தெரிவு!

Date:

இலங்கையின் தேசிய கபடி அணியில் முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் மூன்று வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (14) கொழும்பு இடம்பெற்ற தேசிய கபடி அணிக்கான முதற்கட்ட தெரிவில் நாடாளவிய ரீதியில் 25 பேர் கலந்துகொண்டனர்.  இதில் 18 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த 18 பேரில் கிளிநொச்சி வீராங்கனைகள் மூவரும் அடங்குகின்றனர்.

கிளிநொச்சி சிவநகர் பாடசாலையின் பழைய மாணவிகளான இவர்கள் உருத்திரபுரம்
உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆரம்ப கட்ட பயிற்சியை ஆசிரியர் இராமநாதன் பரஞ்சோதி அவர்களிடம் பெற்ற இவர்கள் கடந்த காலங்களில் தேசிய மட்ட போட்டிகளிலும் பங்குப்பற்றியிருந்தார்கள்.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இடம்பெறவுள்ள ஆசிய மட்ட கபடி போட்டிக்கான இலங்கை அணியின் முதற்கட்டத்தில் தெரிவில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்டுள்ள 18 பேரிலிருந்து இறுதியாக 12 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்த தெரிவிலும் இவர்கள் தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுவதற்கான அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்