யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் கருங்குளவி கொட்டியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு,, 1ஆம் வட்டாரத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் பவிக்குமார் (31) என்ற
இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் சிறியரக கன்டர் வகை வாகனமொன்றை கொள்வனவு செய்துள்ளார். அதில் நேற்று விறகு சேகரிக்க சென்ற சமயத்திலேயே, குளவிக் கொட்டிற்கு இலக்கானார்.
உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1