25.7 C
Jaffna
January 2, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இதேநிலைமை நீடித்தால் ஜனவரிக்குள் இலங்கையில் 30,000 கொரோனா மரணங்கள்: நிபுணர்குழு அதிர்ச்சி அறிக்கை!

இலங்கையின் தற்போதைய கொரோனா பரவல், இறப்பு நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்தால்,  அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் கொவிட் நோயால் இறக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலக சிறப்பு மருத்துவர்கள் கூட்டாக தயாரித்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை நேற்று (12) சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போதைய நிலை தொடர்ந்தால் செப்டம்பர் நடுப்பகுதி வரை ஒரு நாளைக்கு 6,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலைமை உருவாகும். ஒக்டோபர் தொடக்கத்தில் இறப்புகள் ஒரு நாளைக்கு சுமார் 220 ஆக உயரும், தீவிர சிகிச்சை பிரிவு (ICU) ஒக்டோபர் தொடக்கத்தில் சுமார் 275 ஆக உயர்ந்தது, மற்றும் ஜனவரி 2022 க்குள் சுமார் 30,000 இறப்புகள் நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

4 வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அதிகரித்தால், ஒக்டோபர் மாதத்திற்குள் நாளாந்த தொற்று 1,000 ஆகவும், இறப்புகள் ஒரு நாளைக்கு 25 க்கும் குறைவாகவும், மற்றும் ICU பராமரிப்பு ஒக்டோபர் மாதத்திற்கு 25 க்கும் குறைவாகவும் குறைக்கப்படலாம். அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் 18,000 உயிர்களைக் காப்பாற்றலாமென்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையிலிருந்து இலங்கை மக்களை பாதுகாக்க பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல், மாகாண பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக மாவட்டப் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், குறுகிய காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு விதித்தல், அனைத்து பொது நிகழ்வுகளையும் மூன்று வாரங்களுக்குத் தடை செய்தல், பொதுக் கூட்டங்களைத் தடுப்பது, சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாத்தல், பயனுள்ள தகவல் தொடர்புத் திட்டங்கள், நோய்த்தொற்றுகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட பரிந்துரைக்கிறது.

இந்த அறிக்கை உலக சுகாதார நிறுவனம் மற்றும் 30 இலங்கை மருத்துவ நிபுணர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.

நிபுணர்கள் வைத்தியர் பாலித அபேகோன், நிஹால் அபேசிங்க, வின்யா ஆரியரட்ண, ராஜீவ் டி சில்வா, லக்குமாரா பெர்னாண்டோ, பத்மா குணரத்ன, ஆனந்த விஜேவிக்ரமா, பேராசிரியர்கள் அசித டி சில்வா, ராஜீவ் டி சில்வா, சரோஜ் ஜெயசிங்க, இந்திகா கருணாதிலக, நீலிகா மாளவிகே, காமினி மெண்டிஸ், மாலிக் பீரிஸ் மற்றும் மஞ்சு வீரசிங்க உள்ளிட்ட குழுவினரால் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையை படிக்க இணைப்பை அழுத்துங்கள்

https://pagetamil.com/wp-content/uploads/2021/08/5th-Expert-Group-Recommendations-1.pdf

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Pagetamil

Leave a Comment