ஹிமாச்சலில் கடும் நிலச்சரிவு: 11 பேர் பலி – 30 பேர் மிஸ்ஸிங்!
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர், கிண்ணாவூர் மாவட்டம், பியோ – ஷிம்லா தேசிய நெடுஞ்சாலையில், நேற்றைய தினம் பிற்பகல் 12:45 மணிக்கு நிலச்சரிவு ஏற்படுகிறது. அதில் டிரக், மாநில அரசுக்கு சொந்தமான பஸ், மற்றும் வாகனங்கள் புதைந்து போனது.
அந்த பஸ்ஸில் 25 – 30 பேர் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். டிரைவர் உட்பட 14 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்; 11 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு இந்தோ – திபெத்திய எல்லை போலீசாரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மாநில முதலமைச்சர் ஜெயராம் தாக்கூரை தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் செய்வதாகக் கூறப்படுகிறது.