Pagetamil
விளையாட்டு

ரவிச்சந்திரன் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டுள்ளார்! காரணம் என்ன?

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட், மழை காரணமாக டிரா ஆனது. இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி துங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்யப்பட்டது.

டாஸ் வென்றப் பிறகு XI அணியை அறிவித்த கேப்டன் கோலி, காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆல்-ரவுண்டர் ஷர்தூல் தாகூருக்குப் பதிலாக பவுலர் இஷாந்த் ஷர்மா களமிறங்குவார் எனத் தெரிவித்தார். இதனால், இப்போட்டியிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் பெஞ்சில் அமர வேண்டிய நிலை தேவைப்படுகிறது.

காரணம் என்ன?

இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பிட்ச் ரிபோட்டை வெளியிட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங், “மைதானம் வறண்டு காணப்படுகிறது. சில இடங்களில் புட்கள் தென்படுகிறது. இதனால், ஸ்பின்னர்கள் நிச்சயம் களமிறக்கப்படுவார்கள் என நினைக்கிறேன். நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால்போதும். அதேபோல், விக்கெட்களை வீழ்த்த முழுநேர ஸ்பின்னர் தேவையில்லை. பார்ட் டைம் ஸ்பின்னர் இருந்தாலே போதும் ”எனத் தெரிவித்தார்.

கோலி பிளான்:

கோலியும் இதே பிட்ச் ரிபோர்ட்டின் படிதான், பௌலிங் ஆல்-ரண்டர் ரவீந்திர ஜடேஜாவை மட்டும் ஸ்பின்னருக்கு வைத்துக்கொள்ள விரும்புகிறார் எனத் தெரிகிறது. இங்கிலாந்து மைதானங்கள் நல்ல முறையில் ஸ்விங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால், அணிக்கு நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. இதன் காரணமாகத்தான், ஷர்தூலுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மாவை விராட் சேர்ந்துள்ளார். இஷாந்த் ஷர்மா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். மழை பெய்யும் பட்சத்தில், மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் சாதகமாக இருக்கும். இதனையும் கவனத்தில் கொண்டுதான் அஸ்வின் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இப்போட்டியில் இந்தியா வெற்றிபெறும் பட்சத்தில் அல்லது ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அஸ்வினுக்கு இத்தொடரில் இனி களமிறங்க வாய்ப்பு கிடைக்காது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அபார பந்துவீச்சு:

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி, முக்கிய நேரங்களில் விக்கெட்களை கைப்பற்றி, நியூசிலாந்துக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியது. அதேபோல், இரண்டு வாரங்களுக்கு முன்பு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்களை கைப்பற்றி மேட்ச் வின்னராக இருந்தார்.

இதையும் படியுங்கள்

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!