கோவிட் -19 நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ ஒட்சிசன் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறுகிறார்.
இன்று ஊடக சந்திப்பில் பேசிய வைத்தியர் ஹேமந்த ஹேரத், நாட்டில் தயாரிக்கப்படும் ஒட்சிசன் வசதிகள், கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.
ஆகையால் ஒட்சிசன் இறக்குமதி செய்யப்படுகிறது என்றார்.
ஒட்சிசனை இறக்குமதி செய்வதில் வரம்புகள் இருக்கும், வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் திடீரென இறக்குமதியை நிறுத்தலாம் என்று கூறினார்.
இதனால், ஒட்சிசனை தயாரிக்கும் இயந்திரங்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாற்று வழிகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும், இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் வரம்புகள் இருப்பதாக அவர் கூறினார். மேலும் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதிலேயே முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
இதனிடையே, கம்பஹா மாவட்டத்தில் கோவிட் -19 நோயாளிகள் தொடர்பான தரவுகளில் ஏற்பட்ட முரண்பாடு குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கம்பஹாவில் 7,000 கோவிட்-பொசிட்டிவ் நோயாளிகள் சமூகத்தில் இருக்கலாம் என்று தகவல்கள் வெளிவந்திருந்தன. கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் படி, நேற்று மாவட்டத்தில் இருந்து 35 நோயாளிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டனர்.
தொற்றுநோயியல் பிரிவு தரவுகளின் மதிப்பீட்டை நடத்துகிறது என்று வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.
தினசரி தரவு சேகரிக்கப்படுகிறது, ஒரு தவறு நடந்திருந்தால் அது சரிசெய்யப்படும் என்றார் .
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை மறைக்கவோ அல்லது குறைக்கவோ அதிகாரிகள் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.




