அட்டன் கொழும்பு பிரதான வீதியில் சீரற்ற காலநிலைகாரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன நகரத்தில் மரத்துடன் கூடிய மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முச்சக்கர வண்டியொன்றின் மீதும் லொறி ஒன்றின் மீதும் இந்த மரம் முறிந்து விழுந்துள்ளது. அத்துடன் மண் திட்டொன்றும் சரிந்துள்ளது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரத்தை மற்றும் மண்சரிவையும் அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. சீரற்ற காலநிலை நிலவி வருவதால் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
–க.கிஷாந்தன்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1