மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக எட்ஜ் 20 ஃப்யூஷன் வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே, குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டால் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மாதம் ஐரோப்பிய சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 20 தொடரின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 20 லைட்டின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியான தகவலின்படி, மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 800U SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
Flipkart தவிர்த்து மோட்டோரோலா நிறுவனமும், மோட்டோரோலா எட்ஜ் 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகத்தை டீஸ் செய்து வருகிறது.
ஆனால் பிளிப்கார்ட் உருவாக்கியுள்ள ஒரு பிரத்யேக பக்கம் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்கள் மீது கூடுதல் வெளிச்சத்தை பாய்ச்சுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் 10-பிட் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும். இது MediaTek Dimensity 800U SoC மூலம் இயக்கப்படும் மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.
அதில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் பிளஸ் மேக்ரோ லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் ஒரு டெப்த் சென்சார் இருக்கும். முன்பக்கத்தில், மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் ஆனது ஒரு 32-மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை டிஸ்பிளேவின் மேல் மையத்தில் அமைந்துள்ள ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் வைக்கும்.