பிச்சைக்காரர்கள் மறு வாழ்வுக்காக ஒன்றிய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள்.

Date:

பிச்சைக்காரர்கள் மறு வாழ்வுக்காக ஒன்றியஅரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள்.

பொது காலத்தில் பிச்சை எடுப்பவர்களைத் தடை செய்யக் கோரி டெல்லியைச் சேர்ந்த குஷ் கல்ரா என்பவர் தொடர்ந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிச்சை எடுப்பவர்கள் விரும்பி எடுப்பதில்லை, அதை வசதி படைத்தவர்கள் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடாது, பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தின் மக்களவையில் பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், “ஸ்மைல் எனப்படும் விளிம்பு நிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு ஆதரவு வழங்கும் திட்டத்தின் துணை திட்டமாக பிச்சை எடுப்பதில் இருந்து மறுவாழ்வுக்கான விரிவான மத்திய துறை செயல்படுகிறது”.

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், மனநல ஆலோசனை, அடிப்படை ஆவணங்கள், கல்வி, திறன் வளர்த்தல் மற்றும் பொருளாதார தொடர்புகள் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின்படி, அடுத்த 5 வருடங்களுக்கு ரூ .182 கோடி நிதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிச்சைக்காரர்களின் தொழில் திறன்கள் மேம்பாட்டுக்காக ரூ .1.50 கோடி ஒதுக்கீடு, இதுவரை 514 பேருக்கு இதுவரை தொழில் மேம்பாட்டு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தகவல்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்