26.3 C
Jaffna
March 2, 2025
Pagetamil
தொழில்நுட்பம்

குறைந்து விலையில் Mi Pad 5 அறிமுகம்

சியோமி நிறுவனம் மீண்டும் டேப்லெட் அரங்கில் கால் பதித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த சீன நிறுவனம் Mi Pad 5 மற்றும் Mi Pad 5 Pro மாடல்களின் அறிமுகத்துடன் அதன் டேப்லெட் சீரீஸை அப்டேட் செய்துள்ளது. இந்த லேட்டஸ்ட் Mi டேப்லெட்கள் நிறுவனத்தின் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போனான Mi Mix 4 உடன் நேற்று இரவு (ஆகஸ்ட் 10) சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Mi Pad 5 மற்றும் Mi Pad 5 Pro ஆகிய இரண்டும் ஐபேட் மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப்லெட்களை போலவே பல வகையான ஹை எண்ட் அம்சங்களுடன் வருகின்றன. இந்த டேப்லெட்கள் எப்படி இருக்கிறது, என்ன விலைக்கு வெளியாகி உள்ளது, இதோ முழு விவரங்கள்.
Mi Pad 5 அம்சங்கள், விவரங்கள்:
– சிங்கிள் வைஃபை ஒன்லி வேரியண்ட்
– 2,560 x 1,600 பிக்சல்கள் ஸ்க்ரீன் ரெசல்யூஷன்
– 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
– 11 இன்ச் டிஸ்ப்ளே
– சுற்றுப்புற ஒளியின் படி கலர் / ப்ரைட்னஸை சரிசெய்ய டால்பி விஷன் ஆதரவு
– HDR10 மற்றும் TrueTone தொழில்நுட்பத்திற்கான ஆதரவு
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 சிப்
– 6 ஜிபி/128 ஜிபி மற்றும் 6 ஜிபி/256 ஜிபி
– சிங்கிள் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா
– 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
– பேஸ் அன்லாக் ஆதரவு
– 33W பாஸ்ட் சார்ஜிங்
– 8,720mAh பேட்டரி
– சியோமி நிறுவனம் அதன் பேட் ஓஎஸ்ஸிற்கான ஸ்பெஷலாக MIUI-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது (MIUI for Pad ) இது எளிமையான பயன்பாடு, சிறந்த மல்டி டாஸ்கிங் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பிரபலமான ஆப்களுக்கான ஆதரவை உறுதி செய்கிறது.
– ஸ்டைலஸ் மற்றும் மேக்னட் கீபோர்ட் கவர்
– இதன் ஸ்டைலஸ் 18 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகி எட்டு மணி நேரம் வேலை செய்யும்
– டால்பி அட்மோஸ்
– நான்கு ஸ்பீக்கர்களுடன் வருகிறது
Mi Pad 5 Pro அம்சங்கள், விவரங்கள்:
– வைஃபை மற்றும் 5 ஜி மாடல்களில் வருகிறது
– – 2,560 x 1,600 பிக்சல்கள் ஸ்க்ரீன் ரெசல்யூஷன்
– 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
– 11 இன்ச் டிஸ்ப்ளே
– சுற்றுப்புற ஒளியின் படி கலர் / ப்ரைட்னஸை சரிசெய்ய டால்பி விஷன் ஆதரவு
– HDR10 மற்றும் TrueTone தொழில்நுட்பத்திற்கான ஆதரவு
– சற்று சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 870 SoC
– வைஃபை ஒன்லி மாறுபாட்டில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி
– 5 ஜி வேரியன்ட்டில் வெறும் 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்
– வைஃபை ஒன்லி மாறுபாட்டில் 13 மெகாபிக்சல் மெயின் கேமரா + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ரியர் கேமரா அமைப்பு
– 5 ஜி வேரியன்ட் 50 மெகாபிக்சல் மெயின் மற்றும் 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
– முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
– சிறிய 8,600mAh பேட்டரி
– ஆனால் 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
– இது ஸ்பிலிட் ஸ்க்ரீன்ஸ், கஸ்டம் அவுட்புட்ஸ்,, ஸ்மால் விண்டோஸ்பேரலல் விண்டோஸ் மற்றும் பல அம்சங்களுடன் வரும் MIUI க்கான பேட் உடன் (MIUI for Pad) இயங்குகிறது.
– ஸ்டைலஸ் மற்றும் மேக்னட் கீபோர்ட் கவர்
– இதன் ஸ்டைலஸ் 18 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகி எட்டு மணி நேரம் வேலை செய்யும்
– டால்பி அட்மோஸ்
– ப்ரோ மாடல் எட்டு ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment