யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த 68 வயதான பெண்ணிற்கும் தொற்று உறுதியானது.
இன்று 174 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது.
இதில், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 18, 19 வயதான மாணவர்களும் தொற்றிற்குள்ளாகினர்.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் தொற்றிற்குள்ளாகினார்.
வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதில் 4, 5, 12 வயதான சிறுமிகள், 10 வயதான சிறுவனும் உள்ளடங்குகிறார்கள்.



