இந்த அறிகுறி இருந்தா வயிற்றில் குழந்தைக்கு ஆபத்தா? பெண்கள் கவனத்திற்கு.

Date:

கர்ப்பிணிகள் குழந்தையின் வளர்ச்சி காலத்தில் உடலில் தென்படும் ஒவ்வொரு அறிகுறிகளையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஏனெனில் சமயங்களில் குழந்தையின் அசாதாரணமான ஆரோக்கியத்தை அறிகுறிகள் மூலமே கண்டறிந்துவிட முடியும். பிரச்சனைகள் வெளிப்புறமாக இருந்தால் அதை சமாளிக்க சிகிச்சையளிக்கலாம் ஆனால் கருவின் ஆரோக்கியமற்ற நிலையை அடையாளம் காண சில அறிகுறிகளை உணர்த்தலாம்.

கர்ப்பிணியின் வயிற்றின் அளவு உயரம் போன்றவையும் கரு வளர்ச்சியின் நிலையை குறிக்கலாம். கர்ப்பத்தின் 16 வது வாரங்களுக்கு பிறகு கர்ப்பத்தின் முன்னேற்றத்துடன் இந்த உயரம் அளவிடப்படுகிறது. கர்ப்பிணியை படுக்க வைத்து கருப்பையின் மேற்புறத்திலிருந்து அந்தரங்க எலும்பு வரையிலான நீளம் வரை அளவிடப்படுகிறது. கர்ப்பத்தின் உயரத்தின் ஏற்றத்தாழ்வு என்பது அம்னோடிக் திரவம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். அல்லதுகரு சரியான முறையில் வளரவில்லை என்பதையும் இது குறிக்கலாம்.

​இதயத்துடிப்பு இல்லை

கருவின் ஐந்தாவது வாரத்துக்கு பிந்தைய வளர்ச்சியில் குழந்தையின் இதயம் துடிக்க தொடங்கினாலும் பத்தாவது வாரத்தி தான் இதை கண்டறிவது எளிதாகிறது. கருவின் இதயத்துடிப்பை மின்னணு கரு கண்காணிப்பு மூலம் சில சமயங்களில் வயிற்றை தொட்டு நிமிடத்துக்கு இதயத்துடிப்புகளின் எண்ணிக்கை கணக்கிடலாம். சில சமயங்களில் குழந்தையின் நிலை மாற்றம் அல்லது நஞ்சுக்கொடி பிரச்சனைகள் காரனமாக இதயத்துடிப்பை கண்டறிவது சாத்தியமில்லை. அப்போது மீண்டும் பரிசோதனைக்கு மருத்துவர் அறிவுறுத்தலாம். கண்டறிய முடியாத இதயத்துடிப்பின் காரணத்தை கண்டறிய அல்ட்ராசவுண்ட் சோதனை பரிந்துரைக்கப்படலாம்.

​கருப்பை வளர்ச்சி கட்டுப்பாடு

கருப்பை வளர்ச்சி கட்டுப்பாடு என்பது கருவின் வளர்ச்சியில் தலையிடுகிறது. நீங்கள் ஐயூஆர்ஜி நேர்மறை சோதனை செய்தால் உங்கள் கரு அதன் கர்ப்பகால வயதை விட 10% சிறியதாக இருக்கும் என்பதை குறிக்கிறது. நீங்கள் இந்த பாதிப்பை கொண்டிருந்தால் சுவாசிப்பதில் சிரமம், உயர் இரத்த சர்க்கரை மற்றும் அதிக உடல் வெப்பநிலை போன்ற சிக்க்லகள் பிரசவத்துக்கு பிறகு தொடரலாம். இந்த நிலையை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம். நஞ்சுக்கொடியின் அசாதாரண செயல்பாட்டின் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இது சாதாரண நிலையில் குழந்தைக்கு தேவையான சத்தை உறுதி செய்கிறது. மேலும் சிறுநீரக பிரச்சனை, இரத்த சோகை மற்றும் நீரிழிவு போன்றவற்றால் உண்டாகிறது.

​குறைந்த ஹெச். சி.ஜி நிலை

கர்ப்பகாலத்தில் நஞ்சுக்கொடியால் உற்பத்தி செய்யகூடிய ஒரு வகை ஹார்மோன் இது. ஹெச்.சி.ஜி அளவுகள் மூன்று மாதங்களை கடந்த கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இறக்கமாக இருக்கும். பொதுவாக கர்ப்பத்தின் 9 வாரங்கள் முதல் 16வாரங்களில் இது அளவு அதிகமாக இருக்கும்.

​தீவிர வலி நிலை

கர்ப்பகாலத்தில் அதிகப்படியான தசைப்பிடிப்பு மற்றும் வலி சாதாரனமானது. ஆனால் தீவிரமான வலி மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஆரம்ப கர்ப்பத்தில் இது மோசமான இரத்த ஓட்டம் காரணமாக உண்டாகலாம். இது தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. முதுகுவலியும் பொதுவானது. ஏனெனில் வளரும் குழந்தை முதுகெலும்பு மற்றும் கீழ் முதுகில் அதிக அழுத்தத்தை உண்டாக்குகிறது. ஆனால் பல மடங்கு வலி இருந்தால் அது மந்தமான வலியை காட்டிலும் அதிகமானது. குறிப்பாக வலியானது உடலின் முன்பக்கத்திலிருந்து தொடங்கி பின்புறம் சென்றால் அது நல்ல அறிகுறி அல்ல. இதை மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

​யோனி வெளியேற்றம்

கர்ப்பகாலத்தில் யோனி வெளியேற்றம் என்பது பொதுவான நிலை. கர்ப்பம் முன்னேறும் போது இது உண்டாகிறது. பொதுவாக கர்ப்பிணி பெண்ணின் யோனி வெளியேற்றமானது தெளிவானது. வெளிப்படையானது. வெண்மையானது இது மணமற்றதும் கூட. மஞ்சள் நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலிருந்தோ கடுமையான வாசனையுடன் இருப்பதை கவனித்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது.

 

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்