27.8 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

வவுனியாவில் வைத்தியர் உட்பட 76 பேருக்கு தொற்று!

வவுனியா, பெரிய உளுக்குளம் பகுதியில் 17 பேர், மற்றொரு வைத்தியர் உட்பட 76 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.

அதில் நேரியகுளம் பகுதியில் இருவருக்கும், மதீனாநகர் பகுதியில் ஒருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் ஒருவருக்கும், போகஸ்வேவ பகுதியில் ஒருவருக்கும், அம்பலாங்கொட பகுதியில் ஒருவருக்கும், அவுஸ்லப்பிட்டிய பகுதியில் மூவருக்கும், நெடுங்கேணி பகுதியில் இருவருக்கும், சின்னபூவரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஆரா நிறுவனத்தைச் சேர்ந்த இருவருக்கும், மூன்று முறிப்பு பகுதியில் இரண்டு இராணுவத்தினருக்கும், கற்குழி பகுதியில் ஒருவருக்கும், ஒமந்தை பகுதியில் ஒருவருக்கும், புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தரணிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், வெளிவட்டவீதி பகுதியில் ஒருவருக்கும், வெளிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பன்றிகெய்தகுளம் பகுதியில் ஒருவருக்கும், சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஆறு பேருக்கும், சின்னசிப்பிக்குளம் பகுதியில் ஆறு பேருக்கும், வைத்தியர் விடுதியில் இருவருக்கும், கொக்கலிய இராணுவ முகாமில் ஒருவருக்கும், உளுக்குளம் ஒன்பது பேருக்கும், பெரிய உளுக்குளம் பகுதியில் பதினேழு பேருக்கும், கல்குண்ணாமடு பகுதியில் ஒருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், பெரியகுளம் பகுதியில் மூவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், பிரமனாலங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மதீனாமடு பகுதியில் ஒருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், மின்சாரசபையில் பணியாற்றும் ஒருவருக்கும் என 76 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புறக்கோட்டையில் சட்டவிரோத மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

east tamil

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு: அரசு அனுமதி

east tamil

தெமோதர ஜங்சனில் லொரி விபத்து

east tamil

கனடாவில் துயரச்சம்பவம்: யாழ் வாசியும், குழந்தையும் விபத்தில் பலி!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் சிறப்பு ஏற்பாட்டு சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!

Pagetamil

Leave a Comment