தந்தையை அடித்தே கொன்ற மகன்!

Date:

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் மகனின் தாக்குதலினால் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை சிகிச்சை பலனின்றி நேற்று (08) உயிரிழந்தார்.

பாலையூற்று மயான வீதியில் வசித்துவரும் பொன்னத்துரை ராஜா (60) என்பரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி இரவு 9 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து தந்தை மீது மகன் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை தொடர்ந்து மகன் தலைறைவாகி விட்டார். அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழியில் 2 சிறுவர்களின் எச்சங்கள் உட்பட 8 புதிய மனித என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள்...

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்