சூப்பரான சேனைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி.

Date:

சூப்பரான சேனைக்கிழங்கு பொரியல்!

கிழங்குகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். அதில் முக்கியமாகோருக்கு உருளைக்கிழங்கு தான் பிடிக்கும். அதேப் போல் சேனைக்கிழங்கிழங்கின் சுவைக்கும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சேனைக்கிழங்கை பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே அலாதியானது.

இங்கு அந்த சேனைக்கிழங்கு பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

Elephant Yam Stir Fry

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு – 1 1/2 கப் (தோல் நீக்கி பொடியாக நறுத்தது)
சாம்பார் பொடி – 1 1/2 டீஸ்பூன்
சோம்பு பொடி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
புளி – 1 சிறுகண் நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 3/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை
– சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் புளியை சுடுநீரில் 30 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து, பொருள்
சேனைக்கிழங்கை சேர்த்து அடுப்பில் வைத்து, சேனைக்கிழங்கு நன்கு வெந்ததும் அதை இறக்கி, நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் வேக வைத்துள்ள சேனைக்கிழங்கு, சாம்பார் பொடி, சோம்பு பொடி மற்றும் சிறிது தண்ணீர் தெளித்து, நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும். எப்போது பச்சை வாசனையானது போகிறதோ, பிறகு அதை இறக்கினால், சேனைக்கிழங்கு பொரியல் ரெடி !!!

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்