மருத்துவம்

தொடர் இருமலை விரட்ட இதோ எளிய வைத்தியம்.

தொடர் இருமல்: தேன், எலுமிச்சை வெச்சு எப்படி இருமலை விரட்டுவது? ஆறு விதமான தயாரிப்பு முறை, யாரெல்லாம் எடுக்கலாம்!

இருமல் என்பதே மிக மிக அசெளகரியமான விஷயம். தொடர்ந்து பேசக்கூட முடியாத அளவுக்கு இருமல் இருக்கலாம். தீவிர நிலையை எட்டுவதற்குள் சில கைவைத்தியங்கள் செய்து அதை கட்டுப்படுத்தலாம். வீட்டில் பெரியவர்கள் எலுமிச்சை, தேன் கொண்டு இருமலை எப்படி போக்குவது அல்லது கட்டுப்படுத்துவது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
இருமலுக்கு தேன் எலுமிச்சை வைத்தியம். எலுமிச்சை மற்றும் தேன் இருமலை எதிர்த்து போராட உதவுகிறது. இது எளிதாக கிடைக்கும் பொருள்களும் கூட.

எளிமையான முறையில் தயாரிக்கப்படும் இதை குழந்தைகள், டீன் ஏஜ் வயதினர், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என அனைவருமே பாதுகாப்பாக கவனமாக அளவாக பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும். இருமலுக்கு தேன் எலுமிச்சை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

இருமல் டானிக் சிரப் – தேன் எலுமிச்சை டானிக் – 1

இருமல் சிகிச்சைக்கு தேன் மற்றும் எலுமிச்சை சாறுடன் கூடிய மிக எளிமையான செய்முறை இது. எப்படி தயாரிப்பது?

தேவை

தேன் – 1 கப்

எலுமிச்சை – 3 டீஸ்பூன்

சூடான நீர் – கால் கப்

மூன்று தேக்கரண்டி சாறுடன் ஒரு கப் தேன் சேர்க்கவும். இதில் வெதுவெதுப்பான நீர் சேர்த்து தேன் மற்றும் தண்ணீர் இரண்டும் சேரும் வரை கலந்து விடவும். பிறகு இதை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மீண்டும் நன்றாக குலுக்கி எடுக்கவும்.

தினமும் மூன்று வேளை ஒரு டீஸ்பூன் அளவு இதை எடுத்துவரலாம். மீதமிருப்பவற்றை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தவும். ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தவும்.

குறிப்பு நீங்கள் இருமலுக்கு தேன் மற்றும் எலுமிச்சை பயன்படுத்தும் போதெல்லாம் ஆர்கானிக் தேன் மற்றும் புதிய எலுமிச்சை சாறை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். தேனில் நீர் சேர்க்கும் போது கொதிக்கும் நீரை சேர்க்க வேண்டாம். வெதுவெதுப்பான வெப்பநிலையை பராமரிக்கவும். அப்போதுதான் முடிவு பலனளிக்கும்.

இருமல் டானிக் சிரப் – தேன் எலுமிச்சை பூண்டு டானிக் – 2

இருமல் உண்டாகும் போது மார்பில் வலியும் உடன் இருந்தால் பூண்டுடன் எலுமிச்சை சாறு, தேன் கலவையானது சிறப்பாக செயல்படும். பூண்டு நெஞ்சில் இருக்கும் சளியை வெளியிடும் திறன்.

தேவை

எலுமிச்சைசாறு – 1 டீஸ்பூன்

தேன் – 1 டீஸ்பூன்

பூண்டு அரைத்த விழுது – அரை டீஸ்பூன்

தண்ணீர் – 1 கப்

வாணலியை எடுத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் அரைத்த பூண்டு விழுது சேர்க்கவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலவையை மூடி கொதிக்க விடவும். இந்த கலவையை கப்பி ஊற்றி தேன் கலந்து குடிக்கவும். தேநீருக்கு மாற்றாக இரண்டு அல்லது மூன்று வேளை குடிக்கலாம். உடனடி நிவாரணத்துக்கு இது உதவுகிறது.

குறிப்பு:

நீங்கள் இதை மொத்தமாகவும் நீரில்லாமல் கலந்து கொள்ளவும் தேவையான போது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.

இருமல் டானிக் சிரப் – தேன் எலுமிச்சை இஞ்சி டானிக் – 3
-3
நாள்பட்ட இருமலை போக்க இஞ்சியை தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து பயன்படுத்துதல் அதிகமாக குறிப்பிடப்படுகிறது.

தேவை

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

தேன் – 2 டீஸ்பூன்

இஞ்சிசாறு – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதில் இஞ்சி எலுமிச்சை சாறு சேர்த்து சேர்க்கவும். கலவையை கொதிக்க வைத்து பிறகு அடுப்பை இறக்கி குளிரவைத்து வடிகட்டி டம்ளருக்கு மாற்றவும். பிறகு தேன் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். இருமல் குறையும் வரை தினமும் ஒரு வேளை இதை குடிக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது இஞ்சி சாறு குறைவாக பயன்படுத்துங்கள்.

இருமல் டானிக் சிரப் – தேன், எலுமிச்சை, இலவங்கப்பட்டை டானிக் – 4

இலவங்கப்பட்டை எல்லாவற்றுக்கும் தீர்வாக இருக்கும் என்றே சொல்லலாம். தனித்துவமான சுவை சேர்ப்பது முதல் தொடர்ந்து வரும் இருமலை குணப்படுத்துவது வரை உதவுகிறது.

தேவை

தேன் – 1 கப்

எலுமிச்சை சாறு 3 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை பொடி – 1 டீஸ்பூன்

தண்ணீர் – கால் கப்
வாணலியை எடுத்து எலுமிச்சை சாறு, தேன், இலவங்கப்பட்டை மூன்றையும் கலந்து விடவும். இந்த கரைசலை சில நிமிடங்கள் சூடேற்றவும். இது இலேசான கொதி நிலைக்கு வந்ததும் அடுப்பை அணைத்து கரைசலை குளிரவைக்கவும். பிறகு இதை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பதப்படுத்தவும். இரவில் தூங்குவதற்கு முன்பு இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் வரை எடுத்துக்கொள்ளலாம்.

இருமல் டானிக் சிரப் – தேன், எலுமிச்சை, ஆப்பிள் சீடர் வினிகர் டானிக் – 5
ஆப்பிள் சீடர் வினிகர் உயர் வைத்திய முறைக்கு உதவக்கூடியது. எலுமிச்சை மற்றும் தேன் கரைசலில் சேர்க்கும் போது அதன் ஆரோக்கிய நன்மைகள் பல மடங்கு வரை பெருகலாம்.

தேவை

தேன் – 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டீஸ்பூன்

வெந்நீர் – 1 கப்

எலுமிச்சை சாறு, தேன், ஆப்பிள் சீடர் வினிகர் அனைத்தையும் சேர்த்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும். பிறகு இதை மூடி வைத்து அப்படியே விடவும். கரைசலை நன்றாக கிளறி இரவு முழுவதும் ஊறவைத்து படுக்கைக்கு செல்வதற்கு முன்பு குடித்து விடுங்கள். படிப்படியாக இருமல் கட்டுக்குள் வரலாம்.

இருமலுக்கு டானிக் சிரப் – தேன், எலுமிச்சை, தேங்காய் எண்ணெய் டானிக் – 6

தேங்காயெண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருள்கள் உள்ளன. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வகை. நோயின் நீளம் மற்றும் தீவிரத்தை குறைக்கிறது.

தேவை

எலுமிச்சை சாறு – 3 டீஸ்பூன்

தேன் – கால் கப்

தேங்காயெண்ணெய் – 2 டீஸ்பூன்

பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் தேங்காயெண்ணெய், மூன்று டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கால் கப் தேன் சேர்த்து கலக்கவும். அனைத்தையும் சேர்த்து தேங்காய் எண்ணெய் உருகும் வரை சூடாக்கி இறக்கி விடவும். பிறகு குளிர வைத்து கண்ணாடி பாட்டிலில் வைக்கவும்.

அறிகுறிகள் குறையும் வரை தினமும் இரண்டு வேளை டானிக் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளுங்கள். தேங்காயெண்ணெய்க்கு மாற்ற ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.

டானிக் சேர்ப்பதற்கு முன்பு

நிபுணர்கள் கூற்றுப்படி, தேனில் க்ளோஸ்ட்ரிடியம் போட்லினம் உள்ளது. இது ஒரு வகை போட்யூலிசம் ஆகும். இது குழந்தைகளுக்கு ஆபத்தான உணவு விஷத்தை உண்டாக்கும். நோய் கட்டுப்பாட்டு மையங்கள் குழந்தைக்கு ஒரு வயதுக்குள் தேன் கொடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

சளி பச்சை நிறத்தில் இருந்தால் உங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவையாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் கடுமையானவை பிற மோசமான விளைவுகளுக்கு வெளியேறும். விழுங்குவதில் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் தேன் எலுமிச்சை பலனளிக்கும். ஆனால் மூல காரணத்தை குணப்படுத்திய மருத்துவரின் ஆலோசனை தேவை தற்காலிகமாக இந்த பொருள்களை எடுத்துக்கொண்டு மருத்துவரின் சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

பெண்களிற்கு பாதுகாப்பான கருத்தடை முறை எது?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!