சுகாதார விதிமுறைகளை மீறி மாமாங்கப் பிள்ளையார் தீர்த்தோற்சவம்: விசாரணை ஆரம்பம்!

Date:

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி தீர்த்த திருவிழா இடம்பெற்றது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை இடம்பெற்ற தீர்த்தோற்சவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். எனினும், சுகாதாரத்துறையினர் 50 பேருடன் தீர்த்தோற்சவத்தை நடத்தவே அனுமதியளித்திருந்தனர்.

நேற்று மாமாங்கப் பிரதேசத்தில் 21பேர் கொவிட் தொற்றாளர்களான காணப்பட்ட நிலையில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருமளவானவர்கள் ஆலயத்தில் கூடிய போது, பொலிசார் அங்கு கடமையில் இருந்தனர். பொதுமக்களை சுகாதார அறிவுறுத்தலை பேணுமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், மக்கள் அதை கணக்கில் எடுக்கவில்லை.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்