சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் 16.3 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசியைக் நாட்டிற்கு கொண்டுவந்து தடுப்பூசி இயக்கத்தில் பங்களித்ததாக சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில், மூன்று தனித்தனி சரக்கு விமானங்கள் மூலம் நான்கு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக, தடுப்பூசி திட்டத்தை எளிதாக்க சீனாவின் ஷாங்காயிலிருந்து ஒரு மில்லியன் சிரிஞ்ச்களையும் இலங்கைக்கு எடுத்து வந்ததாக சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் nதரிவித்துள்ளது.




