26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

சரும துளைகளை க்ளீன் பண்ணி சருமத்துக்குள் உள்ள அழுக்குகள் வெளியேற்றிட வழி இதோ.

சரும பராமரிப்பில் மிக முக்கியமான விஷயம் சரும துளைகளை சுத்தப்படுத்துவது ஆகும். ஏனெனில் முக்கால் வாசி சரும பிரச்சனைகளுக்கு காரணம் சரும துளைகளில் எண்ணெய், மாசுக்கள் மற்றும் அழுக்கு இவற்றால் அடைப்பு ஏற்படுவது தான். அதிலும் முகத்தில் பெரிய சரும துளைகளை கொண்ட நபர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு அடிக்கடி பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சரும துளைகளை ஆழமாக சுத்தப்படுத்துவது முகப் பராமரிப்பில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தினசரி வெறும் முகத்தை மட்டும் கழுவுவது இதற்கு போதாது. பெரிய சரும துளைகள் உங்க எண்ணெய் சுரப்பை அதிகப்படுத்தும். எனவே இந்த பெரிய சரும துளைகளை நம்மால் மாற்ற இயலாது. ஆனால் சில வீட்டு வைத்திய முறைகள் மூலம் இந்த சரும துளைகளை சுருக்க முடியும். சரி வாங்க பெரிய சரும துளைகள் இருப்பவர்கள் எப்படி சருமத்தை பராமரிப்பது என அறிந்து கொள்வோம்.

​நீராவி பிடித்தல் :

இது மிக எளிதான சிகிச்சை முறை மட்டுமல்ல பயனுள்ள முறையும் ஆகும். ஆவி பிடிப்பதன் மூலம் உங்க சரும துளைகளை திறக்க முடியும். இதன் மூலம் துளைகளில் அடைப்பட்டுள்ள அழுக்குகளை நீக்க முடியும். ஒரு பாத்திரத்தில் கொதிக்கின்ற தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அந்த தண்ணீரில் இருந்து வரும் நீராவியில் முகத்தை காட்டுங்கள் ஒரு துண்டை கொண்டு மூடிக் கொள்ளுங்கள். இது நீராவி வெளியே செல்ல விடாமல் இருக்க உதவி செய்யும். கூடுதல் புத்துணர்ச்சி பெற இந்த தண்ணீரில் மிளகுக்கீரை அல்லது க்ரீன் டீ சேர்த்து கொள்ளுங்கள். தேயிலை எண்ணெய் கூட சேர்த்து கொள்ளுங்கள். 10-15 ஆவி பிடியுங்கள்.

​தேன் மற்றும் லெமன் மாஸ்க் :

தேன் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தருகிறது. இதன் தன்மைகள் சரும துளைகளை இறுக்க பயன்படுகிறது. முகத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் பட்டை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் யோகார்ட் 1 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளுங்கள். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்க உதவி செய்யும். லெமன் ஒரு இயற்கையான ஸ்க்ரப் ஆக பயன்படுகிறது. எனவே மேலே உள்ள தேன் கலவையில் சில துளிகள் லெமன் சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இந்த பேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 3 முறை செய்து வாருங்கள். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் லெமன் சாறு சேர்ப்பதை தவிருங்கள்.

​பார்சிலி :

பார்சிலி கரும் புள்ளிகளை குறைக்க பயன்படுகிறது. இது உங்க சரும துளைகளை சுத்தம் செய்ய சிறந்த ஒன்றாகும். இதை தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை நீங்கள் பயன்படுத்தி வரலாம். லெமன் மற்றும் தேனுடன் கலந்து பயன்படுத்தலாம். சிறிய அளவு பார்சிலியை எடுத்து வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். அந்த நீரில் ஒரு துணியை நனைத்து அதை முகத்தில் 10-15 நிமிடங்கள் அப்ளே செய்யுங்கள். இதுவே நீங்கள் பார்சிலி மாஸ்க் தயாரிப்பதாக இருந்தால் ஊற வைத்த பார்சிலியை பேஸ்ட்டாக்கி அதனுடன் தேன் கலந்து முகத்தில் அப்ளே செய்யுங்கள். 10-15 நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும்.

​பேக்கிங் சோடா :

2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீ ஸ்பூன் நீருடன் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் உங்க சரும pH அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. 5-10 நிமிடங்கள் கழித்து கழுவிகு கொள்ளுங்கள். 1 டீ ஸ்பூன் தேன் சேர்த்து கொண்டு அதை பயன்படுத்துங்கள்.

​களிமண் பேஸ் மாஸ்க் :

வீட்டிலேயே இந்த களிமண் பேஸ் மாஸ்க்கை செய்ய முடியும். பெரிய சரும துளைகளை சுருக்க இது ஒரு சிறந்த வழி. 3 பங்கு சமமான அளவு களிமண் பவுடர், ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து குழையுங்கள் இதை ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள். நன்றாக காய வேண்டும். எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு இது சிறந்த முறை. களிமண் பவுடர் அருகில் உள்ள மருந்து கடைகளில் கிடைக்கும். ஆனால் இந்த பேஸ் மாஸ்க் கோடை காலத்திற்கு மட்டுமே ஏற்ற ஒன்று.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment