27.6 C
Jaffna
March 28, 2024
விளையாட்டு

21 ஆண்டுகளுக்குப் பின் அணியிலிருந்து வெளியேறிய மெஸ்ஸி

உலகப் புகழ்மிக்க கால்பந்து வீரரான மெஸ்ஸி, ஃபார்சிலோனா அணியிலிருந்து வெளியேறி இருப்பதாக அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஃபார்சிலோனா அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “நிதி மற்றும் கட்டமைப்புத் தடைகள் காரணமாக மெஸ்ஸி மற்றும் ஃபார்சிலோனா அணிக்கு இடையேயான புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. ஃபார்சிலோனா அணியிலிருந்து மெஸ்ஸி வெளியேறுகிறார்.

ஃபார்சிலோனா அணிக்காக அற்புதமாகப் பங்காற்றியதற்காக மெஸ்ஸிக்கு நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். விளையாட்டிலும், தனிப்பட்ட வாழ்கையில் எதிர்காலத்தில் சிறப்பான வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளது.

தனது 13வது வயதில் ஃபார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி 21 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 34வது வயதில் அந்த அணியிலிருந்து வெளியேறுகிறார்.

அர்ஜென்டினாவில் ரோசாரியோ நகரில் பிறந்த லயோனல் மெஸ்ஸி, சிறு வயது முதலே கிளப்புகளுக்கு ஆடும் அளவுக்குத் தனது கால்பந்து திறமையை உயர்த்திக்கொண்டார். ஆனால், இந்தச் சூழ்நிலையில் ஹார்மோன் டிபிஷியன்ஸி எனப்படும் வளர்ச்சிக் குறைபாடு நோய் மெஸ்ஸியை பாதித்தது. இதனால் அவர் உயரமாக வளர்வது தடைப்பட்டது. அவர் வளர வேண்டுமானால் தினமும் ஒரு ஊசியைப் போடவேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர். ஆனால், ஊசியை வாங்க மெஸ்ஸியின் தந்தையிடம் காசு இல்லை. அர்ஜென்டினாவில் உள்ள பல்வேறு கிளப்புகளும் அவருக்கு உதவ மறுத்தன.

இந்த நிலையில்தான் பார்சிலோனா கால்பந்து கிளப்பின் இயக்குநரான கார்லோஸ் ரெக்சாக், மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தார். ஆனால், அப்படிச் செய்ய வேண்டுமானால் ஸ்பெயினுக்கு வந்து தங்கள் கிளப்புக்காக ஆடவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தம் மெஸ்ஸியின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment