26.9 C
Jaffna
January 28, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

வேறுபட்ட தலைவலிகளும் அதற்கான காரணங்களும்.

நம்மில் ஒருவருக்கு வாழ்வில் ஒரு முறையாவது தலைவலி ஏற்பட்டிருக்கும். தலைவலியைப் போக்க ஒரு கப் காபி அல்லது டீ அருந்திவிட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தாலே சிலருக்குப் போதும். ஆனால், நாட்கணக்கில் கூட தலைவலி இருக்கும் நபரை நாம் பார்த்திருப்போம். அது ஒற்றைத் தலைவலியாகக் கூட இருக்கலாம். ஆனால், அது ஒற்றைத் தலைவலியாக இல்லாமல் வேறு சில காரணங்களால் கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தலைவலியின் வகைகள்

மூலையைச் சுற்றியுள்ள திசுக்கள் மற்றும் மூலையில் தோன்றும் சில முக்கிய நரம்புகள் வலியை உணராது. அவற்றுக்குப் பதிலாக தலை மற்றும் கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் உங்களுக்கு ஏற்படும் தலைவலி தொடர்பான சமிக்ஞைகளைச் செய்யலாம். மேலும், சைனஸ், பற்கள், தசைகள் மற்றும் கழுத்தின் மூட்டுகள் கூட உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது. தலைவலியில் 150- க்கும் மேற்பட்ட வகையான தலைவலிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இது உண்மை தான்.

சர்வதேச தலைவலி சங்கம் 1988- ம் ஆண்டில், தலைவலிக்கான வகைப்பாடு முறையை முதல்முதலாக வெளியிட்டது. இது ஒரு நோயாளிக்கு தலைவலியின் வகை குறித்து மிகவும் துல்லியமான அறிய உதவும் என்று நம்பப்படுகிறது.
தலைவலியை பொதுவாக மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம். அவை என்னவேனில், முதன்மை தலைவலி, இரண்டாம் நிலை தலைவலி மற்றும் மண்டை நரம்புகள், முக வலி மற்றும் பிற தலைவலி வகைகள் ஆகும்.

முதன்மை தலைவலி

முதன்மை தலைவலி தான் அதிக அளவில் ஏற்படுகிறது. அதாவது 90 சதவீத தலைவலி புகார்களில் இது அதிகமாக உள்ளது. தொடர்ந்து தலைவலி ஏற்பட சில உணவுகள், ஆல்கஹால், தூக்கப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவையே காரணமாகும்.

பதற்ற தலைவலி

பதட்டமான தலைவலி என்பது பெரியவர்கள் மற்றும் இளம் வயதினரிடையே ஏற்படும் பொதுவான தலைவலி ஆகும். அவை லேசானது முதல் மிதமான வலியையே ஏற்படுத்துகின்றன. இந்த தலைவலிக்கு பொதுவாக வேறு எந்த அறிகுறிகளும் இருக்காது. டென்ஷனால் ஏற்படும் தலைவலி ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பு கூற்றுப்படி, வளர்ந்த நாடுகளில் 20 ல் ஒருவர் தினசரி பதற்றத்தால் ஏற்படும் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர்.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி 4 மணி நேரத்திலிருந்து 3 நாட்கள் வரை நீடிக்கும். வழக்கமாக ஒரு மாதத்தில் நான்கு முறை ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. இந்த ஒற்றைத் தலைவலியுடன், குமட்டல் அல்லது வாந்தி, பசியின்மை மற்றும் வயிற்று வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது ..

கிளஸ்டர் (கொத்து) தலைவலி

கொத்து தலைவலி என்பது ஒரு அரிய வகையான முதன்மை தலைவலியின் ஒரு வகையாகும். இது பொதுவாக 20 வயதிற்குட்பட்ட ஆண்களை பாதிக்கிறது. எனினும், பெண்களும், குழந்தைகளும் இந்த வகை தலைவலியால் பாதிக்கப்படலாம்.

மீண்டும் வரும் தலைவலி

தலைவலிக்கு நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் தலைவலிக்கான மருந்து அல்லது வலி நிவாரணி மருந்தைப் பயன்படுத்தினால், மருந்து உட்கொண்ட பிறகு சிறிது நேரத்தில் குணமடையும். பின்பு மருந்தின் வீரியம் குறைந்தவுடன் தலைவலி மீண்டும் வரும்.

இரண்டாம் நிலை தலைவலி

இரண்டாம் நிலை தலைவலி தலை அல்லது கழுத்தில் உள்ள அடிப்படை கட்டமைப்பு அல்லது தொற்று பிரச்சனை காரணமாக ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பற்களில் ஏற்படும் பல் வலி அல்லது பாதிக்கப்பட்ட சைனசின் வலி, மூளையில் ஏற்படும் இரத்தப்போக்கு அல்லது மூளைக் காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகளின் அறிகுறியாக இருக்கலாம். மூளை அதிர்ச்சி, போதைப் பொருள் எடுத்துக் கொள்வது மற்றும் ஹேங்ஓவர் தலைவலி ஆகியவற்றுடன் தொடர்புடையது தான் இந்த இரண்டாம் நிலை தலைவலி . மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்

நீங்கள் தலைவலிக்கு சிகிச்சை பெற விரும்புகிறீர்கள் எனில், அதற்குரிய சிகிச்சை தலைவலியின் வகை, எத்தனை முறை தலைவலி வருகிறது என்பது உட்பட நிறைய விஷயங்களைப் பொறுத்தது. சிலருக்கு மருத்துவ உதவியே தேவையில்லை. ஒற்றைத் தலைவலி சில உணவுகள் அல்லது வாசனை போன்றவற்றால் தூண்டப்படும் என்பதை மறக்காதீர்கள். மேலும், வழக்கமான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் ஒற்றைத் தலைவலியைத் தவிர்க்க உதவும். அதேபோல் இரண்டாம் நிலை தலைவலி கடுமையான உடல் நலப் பிரச்சனைகளின் காரணங்களால் ஏற்படலாம் என்பதால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியம்.

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

east tamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

east tamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

Leave a Comment