தைராய்டு சுரப்பியில் போதுமான தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படாதபோது ஹைப்போ தைராய்டிசம் ஏற்படும். இதனால் எடை அதிகரிப்பு, சோர்வு, மலச் சிக்கல், வறண்ட சருமம் மற்றும் முடி உதிர்தல் போன்றவை ஏற்படும்.
ஒருவருக்கு எவ்வளவு அயடின் தேவை.
வயது வந்த ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு 150 மைக்ரோ கிராம் அயடின் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதேவேளையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அயடினின் தேவை அதிகமாக உள்ளது. அதாவது அவர்கள் 220 மைக்ரோ கிராமில் இருந்து 290 மைக்ரோ கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுருத்துகின்றனர்.
உப்பு
நம் உடலில் அயடின் உற்பத்தி ஆகாது. அதனால் அதனைப் பெறுவதற்கான ஒரே வழி, அயடின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது தான். உலகம் முழுவதும், அயோடைஸ் செய்யப்பட்ட உப்பை உணவில் சேர்த்துக் கொள்வது, அயடின் குறைபாட்டைக் கணிசமாகக் குறைக்க உதவி செய்கிறது. ஒரு கால் தேக்கரண்டி அயோடைஸ் செய்யப்பட்ட உப்பில் சுமார் 95 மைக்ரோ கிராம் அயடின் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடல் உணவுகள்
கடல் உணவுகளில் அயடின் நிறைந்துள்ளது. ஏனெனில், கடலில் வாழும் உயிரினங்கள் கடல் நீரிலிருந்து கனிமத்தை உறிஞ்சுகின்றன. அதனால் அவற்றில் அயடின் நிறைந்து இருக்கும். ஒரு அவுன்ஸ் கடல் இறாலில் சுமார் 30 மைக்ரோ கிராம் அயடின் உள்ளது. அதேபோல் கடல் மீனான டுனாவின் எண்ணெயில் 17 மைக்ரோ கிராம் அயடின் நிறைந்து உள்ளது. அதேபோல் சுட்ட கடல் மீனில் 99 மைக்ரோ கிராம் அயடின் உள்ளது.
சீஸ்
அயடின் சிறந்த ஆதாரங்களில் ஒன்று தான் பாலாடைக்கட்டி எனப்படும் சீஸ். ஒரு கப் பாலாடைக் கட்டியில் 65 மைக்ரோ கிராம் அயடின் உள்ளது. அதனால் நம்முடைய உணவில் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை சீஸை சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் பருமன் உள்ளவர்கள் சீஸ் சாப்பிடுவதைத் தடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதனால் அடிக்கடி சேர்க்காமல் எப்போதாவது எடுத்துக் கொள்ளலாம்.
முட்டை
உங்கள் உணவில் அயடின் பெறுவதற்கு மிகவும் நம்பகமான மற்றும் எளிதான வழிகளில் ஒன்று தான் முட்டையின் மஞ்சள் கருவை உணவில் சேர்த்துக் கொள்வது. ஒரு முட்டையில் 24 மைக்ரோ கிராம் அயடின் உள்ளது. நம்மில் பலர் முட்டையின் வெள்ளைக் கருவைத் தான் எடுத்துக் கொள்வர். மஞ்சள் கருவை ஒதுக்கி விட்டு, வெள்ளைக் கருவை மட்டுமே உண்ணுவர். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், முட்டையின் மஞ்சள் கருவில் தான் அயடின் உள்ளது.