தினை சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க முடியும் என்கிறது புதிய ஆய்வு. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை நிர்வகிப்பது மிகவும் அவசியம். எனவே தினை போன்ற உணவுகளை மக்கள் எடுத்துக் கொள்ளும் போது அது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதைத் தொடர்ந்து 11 நாடுகளில் இந்த ஆராய்ச்சியானது தொடங்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட கருத்துப் படி தினை உட்கொண்ட நோயாளிகளின் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவானது 12-15 சதவிகிதம் குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்வோம்.
தினை பற்றிய ஆராய்ச்சி :
நீரிழிவு நோய்க்கு முந்தைய நபர்களுக்கு HbA1c (ஹீமோகுளோபினுடன் பிணைக்கப்பட்ட இரத்த குளுக்கோஸ்) அளவு சராசரியாக 17 சதவிகிதம் வரை குறைந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் தினை சாப்பிடுவது ஒரு சிறந்த கிளைசெமிக் குறியீட்டுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வில் வெளியிடப்பட்ட 80 ஆய்வாளர்களின் தரவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதில் 65 பேர் சுமார் 1,000 மனித பாடங்களை உள்ளடக்கிய ஒரு மெட்டா பகுப்பாய்விற்கு தகுதியுடைய ஆய்வாளர்கள் என்பதும் தெரிய வந்தது. இன்று வரை இந்த பகுப்பாய்வு ஒரு மிகப்பெரிய பகுப்பாய்வாக பார்க்கப்படுகிறது என்று சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) தெரிவித்துள்ளது.
டைப் 2 நீரிழிவு.
நீரிழிவு நோயில் தினையின் பங்கு குறித்து இதுவரை யாருக்கும் தெரிந்து இருக்காது. ஆனால் இந்த ஆய்வு தினை உணவானது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதை நிரூபித்துள்ளது என்று சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா கால கட்டத்தில் இரத்த சர்க்கரை நோயாளிகள் அதிகமாக கோவிட் 19 தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். எனவே நீரிழிவு நோயாளிகள் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். எனவே நமது தட்டில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும்.
கோதுமையும் அரிசியும் விட சிறந்தது
நம் முன்னோர்கள் சாப்பிட்ட மாதிரி தற்போது நாம் தினை போன்ற தானியங்களை எடுத்துக் கொள்ளும் வழக்கத்திற்கு திரும்ப வேண்டும். ஏனெனில் தினை தானிய உணவின் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. தினையின் கிளைசெமிக் குறியீடு (GI) 52.7 ஆகும். இது அரைத்த அரிசி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கோதுமையை விட சுமார் 30% குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் மக்காச் சோளத்துடன் ஒப்பிடும் போது சுமார் 14-37 GI புள்ளிகள் குறைவாக இருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது. 11 வகையான தானியங்களில் தினையின் கிளைசெமிக் குறியீடு குறைவு. கிளைசெமிக் குறியீடு 55-69 க்கு குறைவாக உள்ளது. எனவே அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளத்தை விட தினையின் கிளைசெமிக் குறியீடு குறைவு.