பாலியல் உணர்வைத் தூண்ட உதவும் ஜின்செங் பயன்படுத்துவதன் நன்மைகள்!

Date:

ஜின்செங் வேர் மருத்துவதன்மை கொண்டது. இந்த தாவரத்தை பயிர் செய்த நான்கு ஆண்டுகள் கழித்தே பலன் கிடைக்க தொடங்கும். இலையுதிர் காலத்தில் சேகரிக்கப்படும் இதன் வேர்கள் ஆவியில் வேகவைத்து உலர்த்தப்படுகிறது. இதில் பலவிதமான வேதிப்பொருள்கள் உள்ளது. 3% ஜின்செனாய்டுகள் உள்ளன. இன்னும் பல வேதிப்பொருள்களி உள்ளடக்கிய ஜின்செங் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் இந்த பதிவில் அறியலாம்.

​ஜின்செங் என்றால் என்ன?

11 வகையான ஜின்செங் உள்ளன.வேர்கள் கசப்பான – காரமான மண்சுவை உள்ளன. மருத்துவ குணங்களுக்காக இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் முக்கியமானது ஆசிய ஜின்செங், அமெரிக்கன் ஜின்செங், சைபீடிய ஜின்செங், இந்தியன் ஜின்செங் மற்றும் பிரேசிலிய ஜின்செங் உள்ளது. இதில் ஆசிய மற்றும் அமெரிக்க ஜின்செங் முக்கியமானவை. இவை அதிக அளவு ஜின்செனோசைட்களை கொண்டிருக்கின்றன. இந்த ஜின்செங் இரைப்பை அமிலங்கள், மைக்ரோஃப்ளோரா மற்றும் பிற நொதிகளுடன் தொடர்பு கொள்கிறது. இது உடலில் வேதியியல் ரீதியாக மாற்றப்படுகின்றன. இதனால் இவை உடல் முழுவதும் பரவி நன்மைகள் அளிக்கிறது.

​பாலியல் உணர்வை தூண்டும் ஜின்செங்

வயாக்ரா மூலிகை என்று அழைக்கப்படும் இது பிரபலமான மாத்திரையும் கூட. இந்த மாத்திரை ஜின்செங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆண்களில் பாலியல் உணர்ச்சியை மேம்படுத்த பயன்படுகிறது. ஆண்களுக்கு விறைப்பு அல்லது பாலியல் செயலிழப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. பாலியல் செயலிழப்பை சரி செய்ய நைட்ரிக் ஆக்ஸைடின் அளவு அதிகரிப்பதன் மூலம் ஆண் குறியை தளர்த்தி இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கலாம். ஜின்செங் மூலிகை அந்த வேலையை தான் செய்கிறது. இதன் விளைவாக இந்த மூலிகை ஆண்மை உணர்ச்சியை மேம்படுத்துகிறது. ஆண்களின் டெஸ்டோஸ்ட்ரான் அளவையும் அதிகரிக்க உதவுகிறது.

​நீரிழிவுக்கு எதிரானது

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அமெரிக்க ஜின்செங் இரத்த சர்க்கரை அளவு எப்படி குறைக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகிறது.
ஜின்செங் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களது நிலையை கையாள உதவுகிறது. ஜின்செங் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவு குறையவும் இன்சுலின் அளவு அதிகரிக்கவும் இவை உதவுகிறது.

​ஆற்றலை அதிகரிக்கிறது

ஜின்செங் நீண்டகாலமாக ஆற்றலை அதிகரிக்கவும் சோர்வை நீக்கவும் பயன்படுகிறது. சோர்வாக இருக்கும் நபர்களில் நல்ல முன்னேற்றத்தை காட்டியது. இதை அடிப்படையாக கொண்டு ஆற்றல் நிறைந்த மாத்திரைகள் மற்றும் பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. சோர்வாக இருக்கும் நபர்களின் மனம் மற்றும் உடல் செயல்பாடுகளை தூண்டுவதற்கு இந்த மூலிகை உதவும்.

​புற்றுநோயை குணப்படுத்துகிறது

ஜின்செங் வீக்கத்தை குறைப்பதற்கும் ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டை அதிகரிப்பதற்கும் ஆன்டி டூமர் பண்புடன் அதன் பங்கை தக்க வைத்துகொள்கிறது. இது புற்றுநோயை குணப்படுத்துகிறது என்பதற்கு இதுவரை ஆதாரம் இல்லை. ஆனால் புற்றுக்கட்டி வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாகவும் மெதுவாக்குவதாகவும் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன என்று என். டி தொழில்நுட்ப ஆலோசகர் ஸ்டீவ் ஹெல்ம்ஸ் கூறுகிறார். மேலும் சில ஆய்வுகள் மூலிகையில் உள்ள ஜின்செனோசைடுகள் நுரையீரல் புற்றுநோயை தடுக்கவும், சிறுநீரகம் கருப்பைகள், வயிறு, தோல் மற்றும் கருப்பை வாய் ஆகியவற்றின் புற்றுநோய்களை தடுக்கவும் உதவுகிறது என்று கூறுகின்றன.

​உடல் எடைக்குறைப்புக்கு உதவுகிறது

உடல் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்ற முறையை பாதிக்கும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது எடை இழப்புக்கு அதிக அளவிலும் பங்கு வகிக்கும். பசியின்மை மூலிகையின் பக்கவிளைவுகளில் ஒன்றாகும்.
ஜின்செங் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இது எடை இழப்புக்கு நன்றாக வேலை செய்யும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஜின்செங் உடல் எடை குறைப்பது கண்டறியப்பட்டது. அதிக உடல் எடை கொண்டவர்கள் ஜின்செங் வேர்களை வாங்கி வைத்து குடித்தால் உடல் எடை குறையலாம்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்