முகப்பரு நீங்க உருளைக்கிழங்கு, தக்காளி போதும்.

Date:

உருளைக்கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு என்று சொல்லலாம். இது விட்டமின் சி, பி1, பி3 மற்றும் பி 6 மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பொஸ்பரஸ் போன்ற தாதுக்கள், உணவு ஆக்ஸிஜனேற்றிகளுடன் நிறைந்துள்ளது. உருளைக்கிழங்கு ஆரோக்கியமானது என்பதோடு இது முகத்தை ஜொலிக்கவும் சருமத்தை பராமரிக்கவும் உதவும் என்பது தெரியுமா? எப்படியெல்லாம் உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

முகப்பருவுக்கு உருளைக்கிழங்கு தக்காளி ஃபேஸ் பேக்

உருளைக்கிழங்கு தக்காளி ஃபேஸ் பேக் முகப்பரு இருப்பவர்களுக்கு சிறப்பாக உதவும்.

தேவை

உருளைக்கிழங்கு மசித்தது – 1 டீஸ்பூன்

தக்காளி சாறு – 1 டீஸ்பூன்

தேன் – 1 டீஸ்பூன்

உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி சாறு இரண்டையும் நன்றாக சேர்த்து கலந்து தேன் சேர்த்து மீண்டும் மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை கலக்கி எடுக்கவும். பிறகு இதை முகத்தில் சமமாக தடவி பாதிக்கப்பட்ட பகுதியில் நன்றாக கலந்துவிடுங்கள்.முகப்பரு வரையும் வரை தினமும் கூட இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம்.

தக்காளி மற்றும் உருளைக்கிழங்கில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன. மேலும் சருமத்திலிருக்கும் பாக்டீரியாக்கள் வெளியேற்ற உதவுகின்றன. அவற்றின் அமில பண்புகள் அடைபட்ட துளைகளை திறக்கின்றன.

​நிறமேற்றத்துக்கு உருளைக்கிழங்கு அரிசிமாவு ஃபேஸ் பேக்

தேவை

உருளைக்கிழங்கு சாறு – 2 டீஸ்பூன்

அரிசி மாவு – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

தேன் – 1 டீஸ்பூன்

அனைத்து பொருள்களையும் பேஸ்ட் போல் கலக்கி முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர விடவும். பிறகு இந்த ஃபேஸ் பேக் மெதுவாக தண்ணீர் தொட்டு விரல்களால் மென்மையாக மசாஜ் செய்யவும். வட்ட இயக்கத்தில் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். வாரம் இரண்டு முறை இதை செய்து வரலாம். உருளைக்கிழங்கி சாறு நிறமேற்றத்தை அளிக்கிறது. அரிசி மாவு சருமத்தில் இறந்த செல்களை தேய்த்து பளபளப்பாக மென்மையாக மாற்றுகிறது. எலுமிச்சை சாறு துளைகளை இறுக்குகிறது. தேன் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.

​வயதான எதிர்ப்பு போக்கும் உருளைக்கிழங்கு தயிர் ஃபேஸ் பேக்

தேவை

உருளைக்கிழங்கு மசித்தது – 2 டீஸ்பூன்

தயிர் கெட்டியாக இருக்க வேண்டும் – 2 டீஸ்பூன்

இரண்டு பொருள்களையும் கலந்து மென்மையான கலவையாக மாறும் வரை கலக்கி பிறகு முகம் மற்றும் கழுத்தில் தடவி எடுக்கவும். கண்களின் மேல் கவனமாக வைக்கவும். 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு குளிர்ந்த அல்லது மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். வாரத்தில் இரண்டு முறை இந்த பேக் போட்டு வந்தால் வயதான தோற்றம் விரைவில் வராது.

​எண்ணெய் சருமத்துக்கு உருளைக்கிழங்கு உடன் ஓட்ஸ் பேக்

தேவை.

உருளைக்கிழங்கு – 3 வேகவைத்து தோலுரிக்கப்பட்டது

பால் – 2 டீஸ்பூன்

ஒட்ஸ் – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

உருளைக்கிழங்கை மசித்து அனைத்து பொருள்களையும் சேர்கக்வும். மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி சுமார் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். வாரம் இரண்டு முறை இதை செய்து வந்தால் போதும்.

 

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்