மரணத்தின் மர்மங்கள் வெளிவர வேண்டும்: சாமிமலையில் ஆர்ப்பாட்டம்!

Date:

முன்னாள் அமைச்சர் றிஷாட்பதியுதீன் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த டயகம சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரியும் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை டீசைட் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் இன்று (6) வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

டீசைட் தோட்ட மறுமலர்ச்சசி ஐக்கிய இளைஞர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இவர்கள் தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக மெழுகுவர்த்திகளை ஏற்றி ஹிசாலினியின் ஆத்ம சாந்தி வேண்டி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதுடன் ஹிசாலனிக்கு நீதி வேண்டும்,சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, மரணத்தின் மர்மங்கள் வெளிக்கொண்டு வரவேண்டும், சிறுவர் உரிமையை பறிக்காதே போன்ற வாசகங்களையும் கறுப்பு கொடிகளையும் ஏந்தி தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் முகக்கவசம் அணிந்து சுகாதார நடவடிக்கைகளை கடைபிடித்திருந்தமை குறிப்பிடதக்கது .

-சாமிமலை ஞானராஜ்-

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்