‘நவரசா’ படத்திற்காக வசனம் எழுதிய நடிகர் விஜய் சேதுபதி:

Date:

தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் பலர் இணைந்து உருவாக்கியுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. மனித உணர்வுகள் ஒன்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள நவரசாவில், கருணை உணர்வை மையமாக வைத்து, ‘எதிரி’ என்ற பகுதியை இயக்கியுள்ளார் பிஜாய் நம்பியார். இப்பகுதியில் விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் எதிரி படம் குறித்து இயக்குனர் பிஜாய் நம்பியார் கூறும் போது, ”பிரபல நடிகர் மகராந்த் தேஷ்பாண்டே ஒரு முறை என்னிடம் மிக முக்கியமான ஒன்றைக் கூறினார். நீங்கள் விரும்பும், குருவாக மதிக்கும், ஆளுமையுடன் பணிபுரியும்போது கவனமாக இருங்கள். நீங்கள் அவரைப் பார்த்து வளர்ந்திருப்பதால், அவர்களுடன் பணிபுரிவது சில சமயங்களில் அவர்களின் மகத்துவத்தை, அவர்கள் மீதான உங்களின் கற்பனை பிம்பத்தை அழித்துவிடும். ஆதலால் அம்மாதிரி வாய்ப்புகளைத் தவிர்ப்பது நல்லது என்றார்.

ஆனால், என் விசயத்தில் அது நடைபெறவில்லை. இளமையில் நான் பார்த்து பிரமித்த, மணி சார் உடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். அவருடன் பணிபுரிந்தபோது அவர் மீதான பிரமிப்பு அதிகரிக்கவே செய்தது. வாழ்நாளின் பொன் தருணங்கள் அவை. இப்படத்தில் பல காட்சிகளுக்காக, நானும் விஜய் சேதுபதியும் ஒன்றாக அமர்ந்து விவாதித்து, உரையாடல்களை மீண்டும் எழுதினோம். நடிகர்கள் தங்கள் நடிப்பில் தங்களை எந்த அளவு ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. விஜய் சேதுபதி அவரது காட்சிகள் மட்டுமின்றி மொத்தப் படத்தையும் மேம்படுத்தினார்.

உதாரணமாக நடிகை ரேவதியின் இறுதி வசனத்தை விஜய் சேதுபதிதான் எழுதினார். திரைக்கதையில் அவரது பங்களிப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. டைட்டிலில் திரைக்கதையில் அவரது பெயரையும் இணைத்துள்ளேன். இப்படத்தை உருவாக்க, என்னுடன் உண்மையாக ஒத்துழைத்த, அர்ப்பணிப்புள்ள நடிகர்களைப் பெற்றது எனது அதிர்ஷ்டம்” என தெரிவித்துள்ளார்.
“நவரசா” மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி படம். Justickets நிறுவனத்தின் சார்பில்
மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். “நவரசா” நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று, பிரத்தியேகமாக 190 நாடுகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்