வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக கவுதம் மேனனுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இந்தர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாக உள்ளார். மேலும் படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தற்போது, படத்தின் தலைப்பை திடீரென மாற்றி உள்ளார். அதன்படி படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என புதிதாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் புதுவிதமான தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிடப்பட்டது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
ஏற்கனவே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைக்கப்பட்டுள்ளது.