சிம்புவின் தோற்றத்தை மாற்றிய கவுதம் மேனன் – வைரலாகும் பர்ஸ்ட் லுக்.  

Date:

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக கவுதம் மேனனுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இந்தர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாக உள்ளார். மேலும் படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, ​​படத்தின் தலைப்பை திடீரென மாற்றி உள்ளார். அதன்படி படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என புதிதாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் புதுவிதமான தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிடப்பட்டது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

ஏற்கனவே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்