குஷ்புவின் பெயரை கேட்டாலே அவர் பூசனி போன்று இருப்பது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். நானும் எத்தனை காலம் தான் சப்பியாகவே இருக்கிறேன் என்று உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் குஷ்பு. அதற்கு கை மேல் பலனும் கிடைத்துள்ளது. குஷ்பு அநியாயத்திற்கு எடையை குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார். தான் ஒல்லியான சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள தன் லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பார்கள்,
அருமை குஷ்பு அக்கா. ஆளே மாறிப்போயிட்டீங்க. உங்களின் இளைய மகள் அனியும் ஒல்லியாகிவிட்டார். தயவு செய்து அந்த ரகசியத்தை சொல்லுங்கள். நாங்களும் உடல் எடையை குறைத்துவிடுவோம் என்று கூறப்படுகிறது.
சிலரோ, குஷ்புவுக்கு அழகே வெயிட் தான். அதனால் தயவு செய்து மீண்டும் பழையபடி பூசனி போன்று ஆகுங்கள் அக்கா என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் தான் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். பின்னர் அவரின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது. குஷ்புவை அடுத்து அவரின் குடும்பத்திற்கு நெருக்கமான இசையமைப்பாளரும், நடிகரும், பாடகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது.