செம்பருத்தி கார்த்திக் ராஜ்க்கு குவியும் வாழ்த்துக்கள்.

Date:

செம்பருத்தி சீரியல் ஹீரோ ஆதி ரோலில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். அவர் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து திடீரென விலகினார். எனவே அவருக்கு பதிலாக வேறொருவர் தற்போது நடித்து வருகிறார். சீரியலில் இருந்து விலகிய கார்த்திக் ராஜ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை கார்த்திக் ராஜ் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். அதில் தன்னை சிலர் வேலை செய்ய விடாமல் தடுத்ததாகவும், படம் எடுக்க விடாமல் பாலிடிக்ஸ் செய்வதை தடுக்கிறார்கள் எனவும் கூறியிருந்தார்.

அது மட்டுமின்றி ரசிகர்கள் தனக்கு பணம் அனுப்பினால் அதை வைத்து படம் எடுப்பேன் என்று கூறி வங்கி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதற்க்கு அவர்களுக்கு பணம் அனுப்பப்பட்டது. மொத்தம் இரண்டு கோடி ரூபாய் தேவைப்படுவதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அவர் எதிர்பார்த்த தொகை வரவில்லை என்றாலும் தற்போது கார்த்திக் ராஜ் தனது பிரஜெக்டை தொடங்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியாகி உள்ளனர்.
இதுபற்றி அறிவிப்பை அவர் கடிதமாக வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது ..
“உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். கே ஸ்டுடியோஸுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து கொண்டிருப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தற்போது நிலவும் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் நாம் ஓரிடத்தில் ஒன்றுகூடி இந்த பிராஜெக்டை ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளோம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் ஒருமுறை என் நெஞ்சார்ந்த நன்றி. இந்த பிரஜெக்டை வெற்றிகரமாக செய்து முடிக்கவும் தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் .. உங்கள் கார்த்திக் ராஜ். “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்