சுகாதாரத்துறையினரும் போராட்டம்!

Date:

கோவிட் -19 ஆபத்து கொடுப்பனவை தொடர்ந்து வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் இதுவரை வழங்கப்படாததை எதிர்த்து இன்று சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றன.

அரச மருத்துவ ஆய்வக தொழில் வல்லுனர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகையில், சுகாதாரத்துறையில் உள்ள பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. நேற்று அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் எந்த பலனுமிருக்கவில்லை என்றார்.

அனைத்து அரச சேவையாளர்களையும் கடமைக்கு அழைப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆறு முக்கிய கோரிக்கைகள் தொடர்பான சுகாதார செயலாளருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக குமுதேஷ் கூறினார்.

கோரிக்கைகள் தொடர்பான பதில்கள் அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதால், திட்டமிட்டபடி இன்று தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சகம் உடனடியாக ஒரு முடிவை எட்டும் என்று நம்புவதாகவும், பொருத்தமான உடன்பாடுகள் எட்டப்பட்டால் மட்டுமே தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின்...

கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம்...

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்