அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் கடந்தாண்டு காதலர் தினத்தன்று திரைக்கு வந்த படம் ‘ஓ மை கடவுளே’. காதல், பேண்டசி படமான இதை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கடவுளாக கவுரவ வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது.
இந்நிலையில், இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதன் தெலுங்கு பதிப்பையும் அஷ்வத் மாரிமுத்து தான் இயக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதி நடித்த கடவுள் கதாபாத்திரதில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், ‘ஓ மை கடவுளே’ தெலுங்கு ரீமேக்கில் நடிப்பார் என கூறப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1