24.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் கொரோனா வைத்தியசாலைகள் நிரம்பின: ஒரே நாளில் 68 தொற்றாளர்கள்!

கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் உள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலை
மற்றும் பாரதிபுரம் கொரோனா வைத்தியசாலை என்பன கொரோனா நோயாளிகளால்
நிரம்பியுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாளுக்கு நாள் வடக்கில் அதிகரித்து வருகின்ற தொற்றாளர்களால் இந் நிலைமை
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சுகாதார தரப்பினர்கள் எதிர்வரும் நாட்கள்
நெருக்கடி மிக்கதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கிருஸ்ணபுரம் தொற்று வைத்தியசாலையில் மற்றும் பாரதிபுரம் கொரோனா
வைத்தியசாலைகளில் நோயாளிகளால் நிரம்பியிருப்பதனால் தற்போது முறுகண்டியில்
அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அனுப்பபட்டு வருகின்றனர்.அங்கு பெண்கள் மாத்திரமே அனுப்ப முடியும் எனவும் சுகாதார தரப்பு
தெரிவித்துள்ளது.

இதே வேளைகிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (03) 68 கொவிட் 19
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிராந்திய தொற்று நோயியலாளர்
மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாவட்டத்தில் முழங்காவில்,ஜெயபுரம், கரைச்சி, கண்டாவளை என
மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி அறிவியல்நகர் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் 25 பேர்,
அறிவியல்நகரில் உள்ள மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் இரண்டு என
பரலாக தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கடந்த யூலை மாதம் தொடக்கம் இன்று வரையான காலத்தில் 445 பேருக்கு
மேல் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

மூன்றாவது தடவையாகவும் இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் பாதிப்பு

Pagetamil

வத்திராயனில் பொறுப்பின்றி செயற்படும் உத்தியோகத்தர்கள்

east tamil

ஆவரங்கால் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தரின் மரணம்

east tamil

Leave a Comment